Wednesday 14 March 2012

story of srirangam part - 03(English version at the bottom)



பாகம் - 03





பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக மோசமாக தொடங்கியது பாண்டியர்களுக்கும், முழுமையாக தென் இந்தியர்களுக்கும்... டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள், பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த தமிழகத்தை சூறையாட முடிவு செய்தனர் ....


அவர்கள் மத்திய இந்தியாவில் நிலை கொண்டு இருந்த போது வட கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சளர்கள் தங்களது பெரும் பொன் அணிகலன்களை ஸ்ரீரங்கம் அருகில் உள்ள சமய புரம் என்கிற ஊரில் உள்ள சிவன் கோவிலில் பொன் கூரை வேய்ந்து, சேமித்து வைத்திருக்கிறார்கள் என்கின்ற செய்தியை அறிந்து ... அதை அடைய திருச்சியை நோக்கி பெரும் படையுடன் வந்தார்கள் ....


1311 ஆம் ஆண்டு மாலிக் காபூர் , இந்த கோவிலை அடைந்து அனைத்து செல்வங்களையும் கொள்ளை கொண்டு .. அங்கு உறைந்திடும் அம்பாள கல் திருமேனியை தனது கரங்களால் உடைத்த்தெறிந்தான் ... இந்த திருக்கோவிலை உடைத்தெறியும் புகை மண்டலங்கள் கொள்ளிடம் ஆற்றில் துணி துவைத்துக்கொண்டு இருந்த ஈரம் கொல்லிகளை (this is the tamil name for washerman during 14th century!!!) ஸ்ரீரங்கத்தினுள் சென்று அனைவரையும் எச்சரிக்கை செய்தனர் ..இந்த எச்சரிக்கை அரங்கநாதர் திருவுருவச்சிலையை மற்றும் தாயார் திருவுருவ சிலையை பாதுகாக்க கால அவகாசத்தை கொடுத்தது .... ஸ்ரீரங்கத்தில் அப்போது நிகமாந்த தேசிகர் , பிள்ளை லோகசாரியார் போன்ற ஆச்சா ரியர்கள் வாழ்ந்து வந்தார்கள் ...




இவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறினார்கள் , பிள்ளை லோகச்சரியார் அரங்கன் திருமேனியியை தாங்கி தென் திசை நோக்கி சென்று மதுரை அருகே அழகர் கோவிலில் தங்கினார் ....பின்பு ஜ்யோதிச்குடி என்கிற வூரில் நோய்வாய் பட்டு மறைந்தார் ..1322 உலுக்க்ன் படை எடுப்பிர்க்கு பிறகு ஸ்ரீரங்கம் மனிதர் வாசம் இல்லாத பகுதியாக மாறியது , அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த நிகமாந்த தேசிகன் உலுக்கன் கானை (பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று முடிசூட்டிக்கொண்ட வன் )சந்தித்தாக ஒரு பரம்பர கதை உண்டு பின்னர் தேசிகர் சத்தியமங் களம் சென்று வாழ்ந்தார் . .திருவரங்கத்தில் வாழ்ந்த பல்லாவிறவர் அன்று தன்னுயிர் ஈன்று அரங்கன் திருமேனியை காத்ததால் ,இன்று நாம் பல சேவைகளை கண்டு மகிழ்கிறோம் ...அன்று திருவரங்கத்து மக்களையும் அரங்கன் திருமேனியையும் காத்து பல மறைமுக திட்டங்களை தீட்டி காத்த பிள்ளை லோகச்சரியரை நாம் ஒவ்வொருவரும் வணாங்கி போற்ற வெண்டும்












இவ்வாறாக இந்த கதைகளை பற்றி அறிந்து நான் இந்த முக்கித்துவம் ஆன இந்த சிவன் கோவிலை தேடி என் நண்பர்ருடன் சென்றேன் (19th September 2010, evening 7PM)... சமயபுரம் அருகில் இப்போது உள்ள tollgate அருகில் இந்த கோவிலை கண்டுபிடித்தோம் ... நாங்கள் சென்றே நேரம் அந்த கோவில் குருக்கள் கோவிலை சாத்திவிட்டு வந்து கொண்டு இருந்தார் ... (ஒரு காலத்தில் தென் இந்தியாவின் தலைனாகராக இருந்த இடத்தின் கோவில் ஆள் இல்லாமல் இருக்ககண்டேன் )


பிறகு வழக்கமான வழிபாட்டிற்கு பிறகு மேற்படி விவரித்த முஸ்லிம் படையெடுப்பையும் இந்த கோவில் அழிக்கப்பட்டதையும் சொன்னேன் ,,, அந்த கோவில் காவலாளி அப்போது ஒரு விசயத்தை சொன்னார், கோவில் புனரமைப்பு வேலை நடை பெறுவதால் அன்று காலை கோவிலை சுற்றி மணலில் புதைந்து இருந்த பல பழைய கற்களை இயந்திர உதவி கொண்டு வெளியில் கொட்டி இருக்கிறார்கள் ... (ஆம் அன்று காலைதான் )






நான் உடனே அவைகளை பார்க்க வேணும் என்று கூறி வெளியில் சென்று பார்த்தல் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிற்கு கற்க்குவியில் காணப்பட்டது .... நான் இதில் ஏதாவது அம்மன் சிலை காணப்படுகிறதா என்று கேட்டேன் .. அந்த காவலாளி ஒரு பெரிய கல் பாறை அடியில் உள்ள ஒரு சிலையை கண்டதாக சொன்னார் ... என்னுள் மிகப்பெரிய மின்சாரம் பாய்ந்தார் போல் இருந்தது .... 1230 ஆம் ஆண்டு ஹொய்சள மன்னனால் கட்டப்பட்டு 1311AD இல் மாலிக்காபூர் ஆல் தன் கையால் பின்னப்படுத்தப்பட்ட அம்பாள சிலையை காணப்போகிற எண்ணம் மனத்தையும் மீறி உடலையும் ஆட்கொண்டது ...

அந்த மாலை நேர இருளில் கை விளக்கு கொண்டு தேடி அந்த அம்பாள திருமேனியை நிமிர்த்தி வைத்து பார்த்த காட்சியை தான் நீங்கள் காண்கிரீகள் ......




































மேற்க்கண்ட சிலை கடந்த மாதம் (Feb 2012) வரை மழையில் கிடந்தது .. பிறகு எனது பல முயற்சிகளுக்கு பிறகு அரசு அருங்கட்சியகதுக்கு மாற்றப்பட்டுள்ளது ...

The english version :-






11 century dawns on tamilnadu as well as south india in a very bad note..The delhi sultans decided to plunder the south.When they are stationed in northern karnataka , they heard about the richness, the hoysalas stored in their second capital in Kannanur near samayapuram and the richness of that siva temple..


1311, malikkafur invaded this part of the country and plundered this siva temple and destroyed the temple to rumbles , the dust which rose alarmed the washer man in the colidam riverbed. who in turn cautioned the people of srirangam.. it gave srirangam people enough time to move perumal out of srirangam and sealed the main sanctum sanctorum with a wall .during this period Nigamantha desikar and pillailogachariar were living in srirangam ..


pillailoagachariyar took to the south route and ended up near madurai with perumal , latter he died in jyothiskudi due to illness..


during this and after another 1322 invasion by Ulugh Khan (he is non other than famous mohamad bin thuklak , made srirangam a deserted place (Nikamantha Desigan, vaishnava sambrathaya aacharya ,it is learned to have met him , but some dispute that.. he also left for sathyamangalm ..

because of these so many people's scarifies we are able to enjoy the nam perumal deity today..


we should profoundly pay our gratitude to pillailogachariyar for his immense statesmanship and wit and valor fitting a king for leading from the front with his bakthi alone for saving srirangam temple... leave alone his contributions in form of writings... every devotee of renganatha should now bow his head in honor of that great and brave soul.... (his statue picture is shown above)

on 19th September, 2010 around 7 PM i went in search of this temple, and found it near the current day toll gate on the trichy chennai high way near samayapuram.. when we are approaching the temple the priest was leaving the temple (This was the main temple of capital of south india in 1200AD ,with no other soul insight )


after the regular worship and during the chat with the priest and only one another person, the watchman of the temple , i elaborated the muslim invasion and destruction of this temple...The watch man told me, that morning the renovation team has moved a large destructed temple stones with machinery outside the walls of the temple and took me to a place to a size of a tennis court full of old temple stones... i asked them is there any amman deity found in this heaps?? he told me that there is one under a big boulder ... my heart races to see a thing no one has seen for the past 800 years... (this temple was build by hoysalas in 1230AD and destroyed by Malik kafur in 1311). The main deity will always be destroyed by malik kafur by his own hands according to legend ..


The above pictures are taken by me while i personally took this deity out with the help of some locals....


after a long persuasion by me to the authorities, this deity is now at the custody of govt ...





































2 comments: