போஜீஸ்வரா கோவில் சமயபுரம்
பாகம் - 01
எனது நண்பர் ரெங்கநாதன் (Hindu reporter karur)அவர்தம்
ஆசிரியர் எழுதிய " ரெங்கராட்டினம்" என்கிற ஒரு புத்தகத்தை
பற்றி கூறி ... அதன் சாராம்சத்தை பற்றியும் சொன்னார்..
வீர நரசிம்மா II (1220–1235),ஹொய்சள ராஜா, கர்நாடகாவை
ஆண்டு வந்த காலத்தில் ஒரு பெரும் தங்கப் புதையல் கிடைத்திட்டது
.அவனது அரசபையில் இருந்த மந்திரி ஒருவர், இந்த தங்கம் தோஷம்
உள்ளதாக காணப்படுகிறது, எனவே இதை நாம் கைகொள்ள வேண்டாம்
என்று தடுத்துக் கூறினார்...
இந்த தங்கத்தை கைக்கொள்ளும் எவருக்கும் கடுமையான சோதனைகள்
ஏற்ப்படும் என்றும் எச்சரித்து, அதை தடை செய்ய எத்தனித்தார்... அரசன்
அவரை மறுத்து ... சிறை கொண்டான்.
தமிழக அரசியல் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன ... சோழ பாண்டிய சண்டைகள் உச்சத்தை அடைந்தன... மூன்றாம் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் பாண்டியர்கள் கை ஓங்கி சோழர்கள் ஆளுமை மங்கத்துடங்கியது ...
இரண்டாம் வீர நரசிம்மன் தனது மருமனான மூன்றாம் ராஜராஜ சோழனுக்காக தமிழகத்தில், ஸ்ரீரங்ககத்துக்கு அருகில் கண்ணனூர் குப்பம் (இன்றய சமயபுரம் ) என்கிற ஊரை தன இரண்டாம் தலைநகராக கொண்டு ஒரு சிவாலயம் (அதன் தற்போதைய படம் இணைக்கப்பட்டுள்ளது ) கட்டுவித்து பொன் கூரை வெய்து (மேற சொன்ன குறை உடைய பொன் புதையலை சேமித்து வைத்து ஆண்டு வந்தான்..
இந்த கால கட்டத்தில் சுந்தர பாண்டியன் சோழ அரசனை வென்று அவனை சிறை பிடி த்து சென்றான் .... அதனுடன் இக் கோவில் போகிஷங்களையும் கவர்ந்து சென்றான் ...
சுந்தர பாண்டியன் கவர்ந்து சென்ற இந்த தங்கத்தை திருவரங்கத்து அரங்கனுக்கு அளித்திட முடிவு செய்து, அன்றைய தின அதிகாரிகளை மற்றும் ஆச்சார்யர்களை அணுகினான் ..
இதனிடையில் ,ஹொய்சள ராஜாவால் கைது செய்யப்பட்ட மந்திரியின் புதல்வி ஸ்ரீரங்கம் சென்று இந்த தோஷம உள்ள தங்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று அனைவருக்கு வேண்டுகோள் விடுத்தாள்... பல டன் எடை உடைய அந்த தங்கத்தை ஸ்ரீரங்க வாசிகள் தம்மை ஆளும் பாண்டிய ராஜாவிடம் இருந்து பெற மறுத்தனர் .(ஒரு நூறு ரூபாய் இன்று கோவிலில் என்ன மரியாதையை பெற்றுத்தரும் என அனைவரும் அறிவீர் ) மன்னன இரண்டு ஆண்டுகள் பல வழிகளில் போராடி .. அரங்கனுக்கு பொன் கூரை வேயவும், மற்றும் சந்துனு மண்டப சுவர்களில் அலங்கரிக்கவும் ஒப்புக்கொண்டார்கள் .. (பொன் வெய்த பாண்டியன் , மதுரைய மீட்ட சுந்தர பாண்டியன் இவனே )
அரங்கன் ஏன் இந்த தோஷமுள்ள தங்கத்தை பெற்றான் என்பதை வரும் நாட்களில் பார்ப்போம் ...
நல்ல முயற்சி வாழ்த்துகள் அனைத்து தமிழகமுமே அள்ள அள்ள குறையாத அட்ஷய வரலாற்று குவியல்கள்
ReplyDeleteநன்றியுடன்
தங்களது பழைய புள்ளியியல் கல்லூரி தோழன்
மா கரிகாலசோழன்
நன்றி
Deleteநல்ல முயற்சி , முக புத்தகத்தை விட இது 100% சிறந்தது.
ReplyDeletesuper.. please continue..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVery nice sir....Please continue your activities.
ReplyDelete