Friday, 16 March 2012

story of srirangam part -04- (1300 AD)in English & Tamil

திருவரங்கத்திற்கு , துலுக்கர்களால் ஏற்ப்பட்ட பெரும் கலாபத்திற்கு (1322 AD க்கு )பிறகு பெரும் துயரம் ஏற்பட்டது.. பிள்ளைலோகச்சரியார் அரங்கன் திருமேனியுடன் தென் திசை சென்ற வுடன் திருவரங்கத்து வாழ் மக்கள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்து சிறு சிறு கோவில்களை கட்டி அரங்கனை வழி பட்டு வந்தனர் ...

இதில் மணச்சநல்லூர் அருகில் உள்ள அழகிய மணவாளம் என்கிற ஊரின் உள்ள ஒரு பாழடைந் த கோவில் ஒன்று என் கவனத்தை கவருகிறது ... இதன் மிக அருகில் நாயக்கர் கால கட்டுமானத்தை ஒப்ப தற்போதிய அழகிய மணவாள பெருமாள் கோவில் இன்று வுள்ளது ... இந்த கோவிலை சுற்றி பின்னமான பல சிலைகள் காணப்படுகின்றன ...

என்னுடைய அனுமானம் ... அரங்கன் (13 th May 1371 ) திருவரங்கம் திரும்பியவுடன் அனைவரும் இந்த கோவிலை கைவிட்டு இருக்கக்கூடும் ... மேலும் அரங்கநாதர் ஸ்ரீரங்கத்தை விட்டு திருப்பதியில் இருந்து வந்த காலத்தில்,  திருபுவன சக்ரவர்த்தி குலசேகர பாண்டியன் 30 ஆண்டு(30.01.1344) கல்வெட்டு எண் 252, ARE no. 371 of 1953-54) ஆழ்வார் திருநாட்டுடைய பிரான் திருமாளிகையில் அழகிய மணவாளப் பெருமாள் என்பார் எழுந்தருல்வித்த ஸ்ரீரங்கநாதன் என்று குறிப்பு ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது ...


"குலசேகரன் என்று அழைக்கப்பட்டு வந்த ரவிவர்மன் ஒரு புரட்டாசி மாதத்தில் , ஸ்ரீரங்க நாதனுடைய விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து தீபோத்ஸவம் கொண்டாடினான் என்று பாண்டியர் காலத்துக் கல்வெட்டு குறிப்பிடுகிறது .. (srirangam incription NO. 281, ARE No. 46 of 1891)


இந்த கல்வெட்டுகலில் இருந்து ஸ்ரீரங்கம் பாழ் பட்டு இருந்தமையும் அரங்கனை பல்வேறு இடங்களில் வைத்து வழிபட்டதையும் அறியமுடிகிறது ..


மேல சொன்ன இடத்தையும் தாண்டி கிழக்கு அடையவளஞ்சான் திரு வீதிக்கு கிழக்கில் கும்படம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு ஸ்ரீரங்கநாதர் விக் ரஹ ம் மற்றும் கோபுர அமைப்புகள் , இந்த கல்வெட்டுகளை உறுதி படுத்துகின்றன ...(இந்தமேலே படத்தில்  காணும் கோவிலை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை ... தற்போதிய ஸ்ரீரங்கம் பெண்கள் மேல் நிலை பள்ளிக்கு எதிரில் உள்ள இடம் தான் இது .....இந்த கோவிலை பற்றி எவருக்கேனும் விவரம் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கலாம் ..

English version : - After facing great destruction of the place and people by the brutal and savaging muslim invaders, the people of srirangam deserted it to live in nearby forests..

They build their own temple for Lord Renganatha to their own ability and lot of devotion...

Even though there is no record of any sort to provide us with any correct information... I found one place worth taking note...
The place is azhgiyamanavalam, a small village near manachanallure.. There is a very small temple now built by  nayakas in their own distinctive  type temple architecture.. The pictures I have posted here is a small well build temple near that existing one..It is surrounded by lot of broken idols and alike of some Vishnu temple...
I presume that when Renganathar returned to srirangam (13 May 1371AD) people would have also abandoned this temple to  stay in srirangam...

There are two stone inscriptions found in the records of  srirangam ..
1. "thirupuvana sakravarthi kulasekara pandiyan 30th year of rule,   (30.01.1344AD) inscription No. 252. ARE NO. 371 of 1953-54).. States...
"aazhvaar thirunaattudiya piraan thirumaligaiyil azhgiya manavaalap perumal enbaar ezhun tharuvitha sriranganaathan"
2. srirangam inscription No.281, ARE NO.46 of 1891
states ..
"Kulasekaran enkira ravivarman oru purattasi maaththil sriranga nathanudiya vigrahaththai prthistai seithu theeboshthavan kondadinaan"
Apart from the place i felt... there is another one beyond the east adayavalanjon and opp to srirangam girls higher secondary school , kumbadam ... there is a temple with renganathar and arch type paravasudevar like that of srirangam temple....
i couldn’t find this place and this place needs out real research...
Those who have seen anything like this there may contact me ....


2 comments:

  1. Great - thanks for the english translation. Very helpful for people like me. I am glad you also were succesfull in your research of this place.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete