மத்திய மாநில அரசு சண்டை 1490 AD
(இது இன்னும் ஒரு நூறு ஆண்டுகள்
தாண்டி .. முந்தைய பதிவில் இருந்து )
தற்காலத்தில் மத்தியில் ஒரு கட்சி மற்றும் மாநிலத்தில்
ஒரு கட்சி ஆட்சி புரிந்தால் ஏற்படும் சண்டை ..மாநில ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலைமை
அறிந்ததே ... இதே மன்னர் ஆட்சி காலத்தில்
நடந்தது என்றால்!!
மாலிக்காபூர் படை எடுப்பின் பின் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் சுமார் 50 ஆண்டுகள் பாழ் பட்டே கிடந்தது பின்னர் 1371 AD (ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் அந்த வருடம்தான் ஸ்ரீரங்கம் திரும்பினார், சுமார் 70,000 படை வீர்களுடன் .. அதனாலே அவர் "ரெங்கராஜா" என அழைக்கப்படுகிறார் !!
வீரகம்பன்ன உடையார் (விஜயநகர் பேரரசு )மதுரை சூல்தான்களை வென்று தமிழகத்தை நேர் படுத்தினார். இவர் காலத்தில் தமிழகத்தை “மஹா மண்டலேஸ்வரர்கள் “ என்கிற பெயரில் அந்ததந்த பகுதி அரசர்கள் விஜய நகர அரசுக்கு கப்பம் கட்டி ஆண்டு வந்தனர்கள் ..(state governments) இவ்வழி வந்தவர்களே மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள்
இதில் விஜயநகர பேரரசு .. பல வித குடும்பத்தினாரால் ஆளப்பட்டது ..
திருச்சி பகுதியை "கோனேரிராயன்" என்போன் மகாமண்டலேஸ்வரனாக
ஆண்டு வந்தான் ..இவன் சங்கமகுல விஜயநகர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டு
வந்தார்.. (Sangama Dynasty 1336- 1485)
1486 AD ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சாளுவநரசிம்மன் என்போன் விஜயநகர் ராஜவானான் .. இவனின் மூத்த சகோதரர் “ராமராஜ” என்போன் சன்யாசி கோலம் கொண்டு “ கந்தாடை ராமானுஜ முனி” பெயருடன் ஸ்ரீரங்கத்தில் (தனது தம்பி விஜயநகர அரச அனுமதியுடன் ) பல கையங்கரியங்கள் செய்தது வந்தார் ..( Saluva Dynasty 1485- 1491)
இவர்தான் வைணவ கோவில்களில் பிராமணர் பிடியில் இருந்து விடுவித்து சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் ஏற்றமும் மரியாதையும் பெற்றுத் தந்தவர் ..
மேலும் எண்ணற்ற திருப்பணிகளும் செய்தனர் ..!! இவர் வாழ்க்கை வரலாறு ஆராயப்பட வேண்டிய சரித்திர கட்டாயம் !!
இவர் வாழ்ந்த வீடு இன்றும் ஸ்ரீரங்கம் தெற்கு உத்திரவீதியில் உள்ளது ..
மகாமண்டேஷ்வரன் கோனேரிராயன்.. சோழதேச நிர்வாகி .. அவனின் எதிரி (chaluva dynasty) மத்திய அரசனின் அண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகி !!
மகாமண்டேஷ்வரன் கோனேரிராயன்.. சோழதேச நிர்வாகி .. அவனின் எதிரி (chaluva dynasty) மத்திய அரசனின் அண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகி !!
ஸ்ரீரங்கம் கோவில் நிலங்கள் பல பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டன .. அதில் வரும் வருமானம் கோவிலுக்கு கிடைக்கவில்லை .. வழக்கம் போல் அரசியல் தான் .எல்லா விதத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகிக்கு தொல்லை .. தரப்பட்டது ..
இதில் சைவ வைணவ போர் என்று கொள்ள முடியவில்லை காரணம் .. கோனேரிராயன் சாசனம் மற்றும் பல கல்வெட்டுக்களும் அவன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொக்கப்பனை கார்த்திக்கை கோபுர வாசல் கதவுகள் செய்து கொடுத்த கல்வெட்டு உள்ளது , அந்த கதவுகளை நாம் அனைவரும் 2005 வரை பார்த்து இருப்போம் .. தற்போது அது கோவில் விறகாக பயன்படுத்தப்பட்டு விட்டது ஆம் 1492 AD செய்த ஒரு பொருள் இந்தியாவில் அழிய வேண்டியதே !! பழமையை பற்றி நாம் கவலைப்பட தேவை இல்லை என்பதால் !!!
உண்டியல் காசும் வருமானம் மட்டுமே குறியாக உள்ள அரசு அதிகாரிக்கு சரித்திரம் பற்றிய விசாரம் எதற்கு .. அதுவும் இடத்தை அடைத்துக்கொண்டு !!
கோனேரிராயன் பரீதாபி ஆண்டு ஆவணி 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 1492 AD ..கதவுகள் இட்டு .. இரண்டு கிராமங்களை தானமாக குடுத்தது பற்றிய கல்வெட்டு கார்த்திகை கோபுர வாசல் உள் கீழ் புறம்.
இந்த இருவர் பிரச்சனையில் இரண்டு ஜீயர்கள் மற்றும்
வேறு இரண்டு நபர்கள் வெள்ளை கோபுரம் மற்றும் தற்போதைய ராஜா கோபுரத்தின் மீது ஏறி
தற்கொலை புரிந்தனர்!!
இந்த விசயத்தை தனது சகோதரன் சாளுவநரசிம்மன் தளபதி நரசநாயக்கனுக்கு (அப்போது அவன்தான் அரசாண்டு வந்தான் சாளுவநரசிம்மன்(1491AD) இறந்து போய் இருந்தான் அவன் மகன்கள் சிறுவர்கள் ) கடிதம் எழுதி வரவழைத்து, கொனேரிராயனை போரில் வென்று .. கொன்று ... தனது ஆளுமையை நிலை நாட்டினார் .
.கோனேரி ராயன் ஒரு விதத்தில் சோழ ராஜனாக சொல்லப்படுகிறான் .. எனவே இவனது மரணம் தமிழ் அரச வம்சத்தின் கடைசி அரசனாக கொள்ளலாம் .. (இவன் சாசனங்கள் தமிழில் உள்ளது குறிப்பிடத்தக்கது )
மத்திய அரசை எதிர்த்த மாநில அரசு கவிழ்த்தது .. பின்னர் சாளுவ சாம்ராஜ்யம் நரச நாயக்கனால் கைபற்றபட்டு துளுவ (Tuluva Dynasty) ஆரம்பிக்கப்பட்டது
மேலும் வெள்ளை கோபுரம் மேல் இருந்து வீழ்ந்து உயிர் துறந்த ஜீயர்கள்
ராஜகோபுரம் கீழ் புர சுவற்றில் அப்பவையங்கார் திருவுருவ சிலையை வெட்டு வைத்தும் கீழ் கண்ட வாக்கியத்தை பதிவு செய்தார் கந்தாடை ராமானுஜ முனி!!!!..
தெற்கு தற்போதைய ராஜா கோபுரம் மொட்டையாக இருக்கையில் அதில் இருந்து வீழ்ந்து உயிர் துறந்த அப்பாவய்யங்கார் திருவுருவம் ஒரு காலத்தில் இவருக்கு திருவரசு அமைத்து வழி பட்டு இருக்ககூடும் அதனால் சிறு துளைகள் உள்ளன .. இன்று வழக்கம் போல் இவர்களை மறந்து விட்டோம் ..
இவர் சிலை மேல் உள்ள கல்வெட்டு :-

வெள்ளை கோபுர உட்புறம் அழகிய மணவாள தாசர் மற்றும்
இரண்டு ஜீயர்கள் நிலைக்கால்களில் சிலை ரூபமாக...
அழகியமணவாளதாசர் ..
இவர் சிலை மேல் உள்ள கல்வெட்டு :-
அழகியமணவாளதாசர் ..
இவர் சிலை மேல் உள்ள கல்வெட்டு :-
கீழ கோபுர வாசலில் ஸ்ரீ சௌமிய வருஷம் தைமாதம் இருபதாம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பன்னுகையில் பொறுக்க மாட்டாதேயிந்த திருகோபுரத்திலேறி விழுந்து இறந்த காலமெடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் பெரியாழ்வார் ....
மேலும் வெள்ளை கோபுரம் மேல் இருந்து வீழ்ந்து உயிர் துறந்த ஜீயர்கள்
ராஜகோபுரம் கீழ் புர சுவற்றில் அப்பவையங்கார் திருவுருவ சிலையை வெட்டு வைத்தும் கீழ் கண்ட வாக்கியத்தை பதிவு செய்தார் கந்தாடை ராமானுஜ முனி!!!!..
தெற்கு தற்போதைய ராஜா கோபுரம் மொட்டையாக இருக்கையில் அதில் இருந்து வீழ்ந்து உயிர் துறந்த அப்பாவய்யங்கார் திருவுருவம் ஒரு காலத்தில் இவருக்கு திருவரசு அமைத்து வழி பட்டு இருக்ககூடும் அதனால் சிறு துளைகள் உள்ளன .. இன்று வழக்கம் போல் இவர்களை மறந்து விட்டோம் ..
இவர் சிலை மேல் உள்ள கல்வெட்டு :-
“ சுபமஸ்த்து
சௌமிய வருஷம் தை மாதம் நாலாம் தேதி வெள்ளிக்கிழமை நாள் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு
படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் குடுக்க மாட்டாதே
இந்த திருக்கொபுரத்தில் ஏறி விழுந்து இறந்தகாலம் எடுத்த அழகியமணவாளதாசன்
ஸ்ரீகாரியம் அப்பாவய்யங்கார். இவருக்கு சுவாமி யேக்காளகள் திருத்தேர்புறப்பாட்டு முதலான
அதிகவரிசை பிரசாதித்தருளி பிரம்மமேத சம்ஸ்காரம் பண்ணிவித் தருளி முழுபடித்தனம் கொண்ட
ருளினார். யிப்படி நடந்த இந்த முழு படித்தனத்துக்கு விரோதம் பண்ணியவன் ரெங்கத்
துரோகியாய் போகக் கடவன் அனுகூலம் பண்ணியவன் ஸ்ரீலட்சுமி பரிபூர்ண கடாக்ஷ பாக்யஸ்தனா
இருக்கக் கடவான் “
இனிமேல் நமது திருவரங்கதிற்காக உயிர் துறந்த இம் மாமனிதர்களை அந்த இடத்தை கடந்து செல்லும் போது ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு செல்லுங்கள் !!
இனிமேல் நமது திருவரங்கதிற்காக உயிர் துறந்த இம் மாமனிதர்களை அந்த இடத்தை கடந்து செல்லும் போது ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு செல்லுங்கள் !!
பயனுள்ள பதிவு ..தொடரட்டும் தங்களது பணி!
ReplyDeleteநன்றி
DeleteNICE,KEEP IT UP
ReplyDeletethankyou..
Deletereally impressive, nice article, but in that period one famous famine also hit trichy area i think so.
ReplyDeleteஆம் , அப்போதுதான் ஒரு நாயக்க மன்னன் ஸ்ரீரங்கம் கோவில் நெல்லை தனக்கு தார வேண்டி வந்த போது குடல்சாரவாளநயினார் என்போர் திருவரங்கம் பெரிய கோவில் என்று அளந்து தனது உடல் பாகத்தைதையும் வெட்டி அளந்தாதால் மன்னன் அடாவடியில் இருந்து பின் வாங்கினான் என்று தெரிகிறது .
Deleteமிகச் சிறந்த பதிவு
ReplyDeletewell said articles Anna thanks..
ReplyDeleteபுகைப் படங்களுடன் கூடிய ஒரு அற்புத ஆராய்ச்சிப் பதிவு.சூப்பர் விஜி.
ReplyDeleteFantastic and informative.
ReplyDeleteJust a suggestion, why not use CE and BCE (stands for contemporary era and before CE) instead of AD and BC which is already losing its usage?
very impressive article
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteenthoro mahanu bhavalu jeeyar swamigal death is first news to me.
ReplyDeletei will keen watch regularly in to pass in vellai gopura vasal.
your collections all is most appreciated to vaishnava world to not only present, in all times.
valgha valamudanum, nalamudanum ji
OM NAMO NARAYANAYA