திருவரங்கத்தின் பிரதான வாயில் (1398AD)
தற்போதைய வெங்கடேஸ்வர மருத்துவமனை பின்புறம்

திருவரங்க திருவானைக்கா போர்
இன்றைக்கு ஒரே ஊராக இருக்கும் திருவரங்கமும்
திருவானைக்காவும் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை
பாராட்டி இருந்தனர் என்பது அதிசயமே...
முகமதியர் படை எடுப்பின் பின் 1371 திருவரங்கத்து அரங்கன் (நம்பெருமாள்) திருவரங்கம் திரும்பிய பின் .
பங்குனி மாதம் நடைபெறும் சில உத்சவங்களின் போது திருவானைக்கா கோவில் உள் சென்று அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதியில் சேவை சாதித்து இளநீர் அமுது செய்து தற்போது கோவில் நுழை வாயில் அருகில் தென் புறம இருக்கும் ஜம்புதீர்த்தத்தில் திருவடிவிளக்கி, அங்கே இருக்கும் மண்டபத்தில் சேவை சாதித்து விட்டு எல்லக்கரை மண்டபம் செல்வது வழக்கம்!!
சுமார் 70 ஆண்டுகள் (1322 - 1371 AD) வரை அரங்கன் ஸ்ரீரங்கத்தில் இல்லை .. பின்னர் ஒரு மூன்று ஆண்டுகள் (1375AD பெரும் சண்டை ஏற்ப்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் ஒன்பதாம் ஜீயர் கொல்லப்பட்டார் ) இவர்கள் பழைய படி திருவானைக் கா கோவில் உள் பெருமாளை எடுத்து சென்ற போது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்து போய் இருந்திருக்கிறது .. அப்போது வாழ்ந்த மக்கள் இந்த பழைய வழக்கத்தை நிச்சயமாக ஒரு திணிப்பாகவே எதிர்கொண்டு இருப்பது புரிகிறது ..

இந்த பெருமாள் வருகையை அன்றைய திருவானைக்கா
சைவர்கள் மிக கடுமையா எதிர்த்தானர் .. பெருமாள் வருகின்ற அன்றைய தினம்
திருவீதிகளில் வசிப்பவர் எவராகினும் தற்கொலை செய்தது கொள்ளுதல் போன்று பல விபரீத
விசயங்கள் நடைபெற்றன ..(எவராகினும் இறந்தால் அந்த வீதியில் இறை உத்சவங்கள்
நடைபெறுவதில்லை) இந்த தகராறுகள் கை கலப்பாக மாறி இரு ஊரை சேர்ந்த பலர் மரித்தும்
போயினர்!! இதில் பலியானவர்கள் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாம் பட்டத்து பராங்குச
ஜீயர் மற்றும் பலரும், வேல்ஏந்திய தாசர் என்போரும் அடக்கம்.
ஸ்ரீரங்கம் கோவில் பத்தாவது ஜீயர் ஆழகியமணவாளர் மற்றும் உத்தம நம்பி இருவரும் விஜயநகர் அரசனிடம் சென்று இது பற்றி முறையிட்டு வந்தனர் .

1375 AD
விஜயநகர் அரசன் ஒரு சமாதான குழுவை ரெண்டு
ஊருக்கும் மத்தீஸ்தம் செய்ய அனுப்பினான்.
இதில் . குருவியாச உடையார்,(இவர் அன்றைய விஜயநகர் அரசன் புக்க உடையார் மந்திரி ) கோபால உடையார் , ரகு உடையார் , திருவரங்கத்தி சேர்ந்த உத்தமநம்பி திருவானைக்காவை சேர்ந்த சைவர்கள், அமர்ந்து பேசி, எல்லையை நிர்ணயம் செய்ய பெரியவர் உத்தமநம்பியை கண்களை கட்டி ஓடி செல்லும் பாதையே இருவருக்கும் எல்லைக் கோடு என்று முடிவானது ..
இதில் உத்தமநம்பி என்பது ஒரு குடும்ப பெயர் ..இவர்கள் திருச்சி பகுதியில் அனைத்து நிலங்களையும் நிர்வாகம் செய்தது எல்லா கோவில்களுக்கும் அதை பகிர்ந்து குடுத்து வந்துள்ளனர் (இவர்கள் வைணவர்கள் ) இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பது இவர்களால் உருவாக்கப்பட்டதே ...
இவர்கள் குடும்பம் திருச்சி பகுதியை 1100 AD முதல் 1800 AD வரை மூன்றாம் குலோத்துங்கன் காலம் முதல் ஆற்காடு நாவப் காலம் தாண்டி ஆங்கிலேயர் 1800 AD இல் கலெக்டர் அறிவிக்கும் வரை யார் ஆண்டாலும் நிர்வாகம் பண்ணி வந்து உள்ளனர் !
இவர்கள் தான் தமிழக சரித்திரத்தில், எல்லா கல்வெட்டுகளிலும் ஒரு 1000 ஆண்டுகளாக காணப்படுகிறார்கள் .. (கொடுமை.. பாட புத்தகங்களில் இல்லை!!) இவர்கள் வம்சத்தினர் இன்னும் ஸ்ரீரங்கத்தில் அமைதியாக அரங்கனின் மரியாதை பெற்றுகொண்டு வாழ்கிறார்கள் (இதை பற்றி பின் ஒருமுறை பார்ப்போம்..)
அன்று தென் காவேரியில் இருந்து வட புறம் கொள்ளிடம் வரை இவர் ஓடிய பாதை ஸ்ரீரங்கம் திருவானைக்கா இரண்டு ஊர்களுக்கும் எல்லையாக அமைந்தது. இவர் பெயர் கிருஷ்ணராய உத்தமநம்பி.
இவர் இரு ஊர்களுக்கும் இடையே ஒரு பேரு மதில் கட்டிவைத்து பல மண்டபங்களையும் கட்டி வைத்தார் ..அதில் இப்போது எஞ்சி இருப்பது ஒரு நுழைவாயில் மற்றும் திருவானைக்கோவில் “ஜம்புகேஸ்வர நகர்” அருகில் (நான் இந்த சுவற்றின் சுவடுகளை 1988 பார்த்து இருக்கிறேன்!!) தற்போது சில கற்கள் மட்டுமே விஞ்சி இருக்கின்றன !!

இங்கு படத்தில் காணும் கற்கள் அந்த சுவற்றின் மிச்சமே !!
இதை தெரிவிக்கும் ஒரு தமிழ் பாடல் இன்றும்
அரங்கன் முன் பாடப்பட்டு வருகிறது ..
“மல்லை நிலையிட்ட தோளரங்கேசர் மதிளாள் பட்ட
எல்லை நிலையிட்ட வார்த்தையும் போலல்ல – நீதிதன்னால்
சொல்லை நிலையிட்ட உத்தநம்பி குலம் தழைக்க
எல்லை நிலையிட்ட வார்த்தை எல்லோருக்கு எட்டெழுத்தே “
இவர் உருவாக்கிய எல்லைக் கோடு தற்போதைய ஸ்ரீனிவாச நகர் முதல் தெருவில் அமைந்தது ...இந்த தெருவில் தற்போது இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியே அன்று ஒரு பதினாறு கால் மண்டபம் இருந்த இடம் என்று வரலாற்று ஆசிரியர் வைஷ்ணவ ஸ்ரீ அவர்கள் எழுதி இருக்கிறார் ..
திருவரங்கத்தின் பிரதான வாயிலின் தற்போதைய அவல நிலை !!!

தெலுங்கு எழுத்துக்கள் கொண்ட ஒரு கல்வெட்டு ...விஜயநகர் காலத்தினாக இருக்க வெண்டும் ...
அழகிய வடிவுடன் கூடிய கிருஷ்ணர் .....
வலது புறம் நரசிம்ஹர் ..
.
Sooper Raghava! Very nice information.
ReplyDeletethanks giri
DeleteIt is very interesting history. But now Hindus (including Vaisnavas and Saivas) are facing lot of challanges from Christians, Muslims, Communist, Naxalites and socalled secularist. History is History no doubt about it. Strengthen the unity among the Hindus. Don't start new conflict.
ReplyDeletethis is part of our history .. as we stand today it may look odd and strange.. but we cannot wish away our past ..and more over the priorities of our people have shifted away from these strong beliefs !!
DeleteReally impressed and I am very much interested to know the history of srirangam, your information is worth more than gold, I know few of the saiva people who are very fond of ranga and i know both sides are still foes due to political divide created since many centuries, what we can do to unite these two communities.
ReplyDeleteunderstanding the history of the place gets you to understand the other person.. perumal was being welcomed into TV kovil temple and still there is a mandapam near the pond which hosted those festivities before 1322AD .. due to lapse of some 50 years a whole generation of population has never seen it happen has to think this as a intrusion into their faith.. which let to war..
Deletewho should unite... only understanding where we stand makes people unite
super boss.. eppadi ippadi...
ReplyDeletehttp://sivaparkavi.wordpress.com/
Nice Article, surprised to see there was enmity between Srirangam and Thiruvanaikoil, currently we can't even split both regions now,
ReplyDeleteI think its time to perform the same rituals of bringing vigraham to thiruvanaikoil.
Nice post sir..
ReplyDeleteவரலாறு என்பது பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது .நம் பாட புத்தகங்களில் இல்லை என்பது உண்மைதான் . இது இன்னும் பல உள்ளது. தகவலுக்கு நன்றி .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteExcellent article. Absolutely nice.
ReplyDeleteContinue to write about the less known facts about Srirangam.
The above entrance gate is of historical importance and needs to be protected as a national monument and why not bring it the notice of ASI. I heard of an association/NGO who took up cleaning work of part of Cauvery River near AmmaMandapam a couple of months back. Is it possible to locate the NGO and request them to arrange for removing the vegetation from this structure also. I would like to share a part of the expense involved. please think of it.