Friday 29 May 2015

அரங்கமாநகர் மீது துலுக்கர் படையெடுப்பும் அரங்கன் உலாவும்


அரங்கமாநகர் மீது துலுக்கர் படையெடுப்பும் அரங்கன் உலாவும்

வரும் ஞாயிறு அன்று (31.05.2015) நம்பெருமாள் ஸ்ரீரங்கவிட்டு வெளியேறி பல காடு மலைகள், திவ்ய தேசங்கள் மலைகுகைகளில் தங்க வைக்கப்பட்டு திரும்பவும் 1371 ஆண்டு திருவரங்க திரும்பிய நன்னாளை அனைவரும் கொண்டாடும் விதமாக பத்தர்கள் அனைவரும் கூடி அன்று காலை ஒரு ஊர்வலமும், மாலையில் எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் சுவாமிகள் இதை பற்றி ஒரு சிறப்புரை ,ரங்கா விலாச மண்டபத்தில் ஆற்ற இருக்கிறார் .. அனைவரும் அதில் கலந்துகொண்டு சிறப்பிக்க பிறார்த்திக்கிறேன்..

தென் இந்தியாவின் மீது முதல் முதலில் படையெடுத்து வந்தவன் மாலிக் காபூர் (1311-13) இரண்டாம் முறை படையெடுத்து வந்தவன் உலுக்கன் எனப்பெயர் கொண்ட முகமது பின் துக்ளக் .

இந்த இரண்டாம் முறை படை எடுத்துவந்த போது பலருடைய தலை கொய்யப்பட்ட கோடுர சம்பவம் நடைபெற்றத்தாக கோவில் ஒழுகு கூறுகிறது “ பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வன் மேட்டுக்கலகம் “ என்று நம்பெருமாள் பங்குனி உத்சவம் எட்டாம் திருநாள் அன்று வட்திருக்காவேரி (கொள்ளிக்கரை இன்றைய பஞ்ச கரை ரயில்வே கேட் அருகில் ) கரையில் அன்று இருந்த பன்றியாழ்வான் கோவிலில் பெருமாள் எழுந்தருளி இருந்த போது .. உலுக்கன் வருகை அறிந்து மக்கள் தொடர்ந்து வருவரே என்று அஞ்சி எவரும் அறியாமல் திரை இட்டு பெருமாள் மற்றும் உபய நாச்சியார்களை மறைவாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்றார்கள் ..
இந்த இடம் இப்போது இருக்கும் நிலை பற்றி ஒரு காணொளி
https://youtu.be/r3MOwlA8QcQ

1336 ஆம் ஆண்டு விஜயநகர் சாம்ராஜ்யம் இறைஅருளால் இந்தியாவில் ஏற்பட்டது.. நம்பெருமாள் திருமலையில் இருந்தபோது செஞ்சியை ஆண்டுகொண்டு இருந்த கோபண்ண உடையார் திருமலையில் வருகை தந்து அரங்கநாதனை திரிசித்து விட்டு  ஸ்ரீரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ண சித்தம் கொண்டார் ..

நம்பெருமாளை சிங்கபுரம் என்கிற சேத்திரத்தில் எழுந்தளுப்பண்ணி  பல காலம் ஆராதித்து வரும் காலத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து சிங்கபிரானுடைய (முந்தைய ஸ்ரீரங்கமும் மத்வர்களும் பதிவில் சொன்ன துலுக்கர்களிடம் பழகி அவர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் பூஜை செய்ய அனுமதி வாங்கியவர் ) குமாரர் திருமணத்தூண் (திருமணல்தூண் நம்பி என்றும சில குறிப்புகள் சொல்லுகின்றன ) அன்றைய கோவில் அதிகாரி உத்தம நம்பியை செஞ்சிக்கு அனுப்பி கோபண்ண உடையாருக்கு கண்ணனூரில் உள்ள துலுக்கன் படை பற்றிய செய்திகளை சொல்லி அவனை வென்று ...

1371 CE பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் அழகியமனவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான்  இதற்கான கல்வெட்டும் ஒன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் காணப்படுகிறது .






இந்த கலபக்காலத்தில் (1311-1371) இருமுறை படையெடுப்பு நடைபெற்றதை பார்த்தோம் .. 

அதில் முதல் முறை படை எடுப்பின் போது நம்பெருமாளை டெல்லி சுல்தான் எடுத்து சென்று விட அதை ஸ்ரீரங்கம் கோவில் ஸ்தலத்தார் திரும்ப மீட்டு கொண்டு வந்த விசயமும் அறிய முடிகிறது .. (இதை பற்றிய தெளிவான விளக்கங்கள் கோவில் ஒழுகிலே மற்ற பதிவுகளிலோ  எதுவும் இல்லை என்பதால் அதை முதல் படையெடுப்புக்கும் இரண்டாம் படையெடுப்புக்கும் இடப்பட்ட காலத்தில் (1311-1322) அனுமானிப்பதே சரி என்று   ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கருதுகிறார் )

பின்னர் அரங்கனதரை பிள்ளைலோகசாரியார் உபய நாச்சிமாருடன் மறைவாக எடுத்து சென்றதும் தெரிகிறது ..(1322)

இந்த இருமுறை அரங்கன் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறிய (1311 க்கு பிறகோ அல்லது 1323 க்கு பிறகு தெரியவில்லை ) காலத்தே ஒரு அரங்க பெருமானை புதிதாக செய்து நம் பெரியோர்கள் வழிபட்டு வந்துள்ளார்கள்.

உங்களில் பலருக்கு தெரியாத விசயம் அரங்கன் மூலஸ்தானத்தில் வலது புறத்தில் ஒரு பெருமாள் இருப்பார். நம்பெருமாள் உயரமே உள்ள அவரின் பெயர் திருவரங்கமாளிகையார் . அவரே அந்த கலாபக்காலத்தில் செய்து வைக்கப்பட்ட பெருமாள்..

இதே காலத்தே தாசி ஒருத்தி அரங்கத்தினுள் தங்கி இருந்து துலுக்க படைத்தளபதியை தந்திரமாக அன்றைய உயரமான கோபுரமான கிழ வாசல் கோபுரத்தின் மீது ஏற்றி அதில் இருந்து அவனை கீழே தள்ளி கொன்று தானும் உயிரை மாய்த்துக்கொண்டாள் ..

அவளின் பெயர் காரணமாக (வெள்ளையம்மாள்) அந்த கோபுரத்தை வெள்ளையம்மாள் கோபுரம் என்றும் (வெள்ளை கோபுரம்)  அழைக்கப்பட்டு வருகிறது ..

வெள்ளையம்மாள் இறக்கும் வேளையில் கோவில் அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து சென்றதை, தேவ தாசி ஒழிப்பு சட்டம் (1953) வரும் காலம் வரை செயல் படுத்தி வந்தனர் ..

அவை,.. ஸ்ரீரங்கம் கோவிலில் விளக்கு மற்றும் ஆடல் பாடல் தூய்மை பணி செய்து வந்த தேவ தாசிகளுக்கு .. அவர்கள் இறந்தால் கோவில் மடப்பள்ளியில் இருந்து அரங்கனுக்கு அமுது செய்யும் அடுப்பில் இருந்து நெருப்பும், திருக்கொட்டார

த்தில் இருந்து வாய்க்கு அரிசியும், (அமுது படி), அரங்கன் போட்டுக் கலைந்த மாலை, மற்றும் அரங்கன் கோவில் தீர்த்தம் இவை அனைத்தும் கிடைத்து வர வேண்டிக் கொண்டு இறந்தாள்..

திருவரங்கதில் நம் முனோர்கள்  பெரும் பாடு பட்டு அரங்கனை மீட்டு திருவரங்கம் திரும்பிய நாளை 31.05.2015 அன்று கொண்டாடுகிறோம் ..
அரங்கனுக்காக  பலா ஆயிரம் பேர் உயிர் துறந்து நாளை நினைவில் கொள்ள வரும் ஞாயிறு அன்று காலை ஸ்ரீரங்கத்தில் கூடுவோம் ..












Wednesday 29 April 2015

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 3

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 3


ஸ்ரீரங்கம் கோவில் காவேரி ஆற்றின் சீற்றத்தாலே பலமுறை மண் மேடு  இட்டும் வெள்ள நீரினால் அவதியுற்றும் வந்ததை கண்டு அதை மாற்ற திருவரங்கத்தை அப்போது நிர்வகித்து வந்த "கூரநாராயண ஜீயர் " கந்தாடை தோழப்பருடன் இணைந்து இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டார் ..என்பதை பார்த்தோம் ..

நாம் முன்பே பார்த்தது போல் சிந்தாமணி பகுதி மக்கள் இந்த மாறுதல் அரங்கனையும் அவன் திருவரங்கத்தையும் காக்கவே என்று சொல்லியும் தங்கள் நிலங்களை அளிக்க மறுத்தே வந்தனர் .. அவர்களை கூரநாராயண ஜீயர் தனது மந்திர சக்தியால் சமாதானப்படுத்தி கைகொண்டார்.

கோவில் திருவோழுகு இந்த விசயத்தில் நிறைய தோப்புகளை நீக்கி திருவரங்கத்தின் தென் புரத்தின் வழியாக காவேரி வெட்டப்பட்டதை கூறுகிறது ..

இன்றும் காவேரி ஆறு மேலூருக்கு அருகில் இப்படி திரும்பி இருப்பதை காணலாம் ... இந்த மாற்றம் நடந்த பிறகு முன்பு தென் புறம் (அதாவது இன்று காவேரி ஓடும் இடத்தில் இருந்த ) அய்யானர் கோவில் மற்றும் பிடரி கோவில்களை வட புறம் நகர்த்தி கட்டப்பட்டது ..

தற்கால மேலூர் ஐய்யனார் கோவிலில் உள்ள ஒரு தவக்கோல ஜைன மத துறவியின் சிலை .. அன்று ஸ்ரீரங்கத்தில் ஜைன அகரங்கள் இருந்தமைக்கு ஒரு சான்று .. (அதை அவர்கள் மணவாள மாமுனிகள் என்று எழுதி இருக்கிறார்கள் )

காவேரியில் இருந்து ஒரு அணியரங்கன் வாய்த்தலை (regulator ..இன்று அணைக்கரை என்கிற இடம் ) கட்டுவித்து , ஒரு வாய்க்காலை வெட்டி வைத்து ... அந்த வாய்க்கால் முன்பு காவேரி சென்ற அதே பாதையில் செல்லும்படியாக செய்து !!( இன்று இருக்கும் அந்த வாய்க்கால்தான் அந்நாளைய காவேரியின் தென் கரை )  இதற்காக கரை காப்பானாக தனது சீடன் "காருணாகர தாசன் " என்போனை அவர்  நியமித்தார் ..

இந்த ஆறு (இன்று அம்மாமண்டபம் சாலையில் ராஜகோபுரம் முன் உள்ள பாலம் இதன் மீதுதான் செல்கிறது ) மலட்டு ஆறு என்றே உள்ளூர் வாசிகளால் அறியப்பட்டு வந்துள்ளது ..

இந்த சிறிய வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் வட புறம் நாணல் நடப்பட்டு (அந்த வாய்க்காலில் இருந்து ராஜகோபுரம் வரை ) நிலம் மலடு ஆக்கப்பட்டதை .. கோவில் ஒழுகு மற்றும் கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றான் ..

ஒரு பெரிய ஆறு ஓடிய பாதையில் பல நூறு அடி ஆழம் வரை வெறும் மணல் மட்டுமே இருக்கும் .. அதில் எந்த ஒரு செடியும் வளராது .. அவற்றை மாற்ற நாணல் செடிகளை வளர்த்து இன்று நீங்கள் காணும் பசுமையான பகுதியாக அவற்றை மாற்றிய அந்த விஞ்ஞான முன்னோர்களை என்ன சொல்வது???

...

கூரனாரயனர் என்கிற அந்த மகான் நமது ஸ்ரீரங்கத்தை ஒரு எந்திரம் போல அமைத்து பல நெடும் காலம் நாம் அரங்கன் நகர் வாழ பல கோவில்களையும் மந்திரப்பூர்வமாக அமைத்தார்

காவேரி சென்ற பாதையில் கூரனாராயனர் கட்டிய கோவில்களை வரும் நாட்களில்  பார்ப்போம்..




காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 2

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 2
காவிரியின் மாற்றம் பற்றிய கல்வெட்டுப்படிவங்கள் படங்கள் முந்தைய பதிவுகளில் பார்த்தீர்கள் .. அவை மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சி காலத்தில் 1198 CE இல் பொறிக்கப்பட்டது ..


.இந்த கல்வெட்டுக்களை முழுமையாக படித்தோமேயானால் வெள்ளைக்காரன் வந்துதான் நில அளவை பற்றிய அறிவு நமக்கு (தமிழர்க்கு ) கிடைத்தது என்கிற ஒரு தவறான எண்ணம் தகர்க்கப்பட்டது!!


அன்று காவேரியில் இன்று காணும் மணல் கொள்ளை இல்லாதபடியால் .. வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டு பல விளைநிலங்கள் மண் மேடு இட்டு பயனில்லாமல் போய்விட்டது..


முதலில் "அண்ணவாயில் உடையான் காங்கேயராயர் " என்பவர் இதற்க்கெல்லாம் நிர்ணயம் செய்யும் ஒரு பொது அதிகாரியாக நேமிக்கப்பட்டார் ..


திருவரங்கம் கோவில் நிலங்களும், திருவானைக்கா கோவில் நிலங்களும் தனி தனியே அளந்து சுதர்சன சக்கரம் பொதித்த சின்னம் ஸ்ரீரங்கம் நிலத்திற்கும் , திரிசூலம் பொறித்த சின்னம் திருவானைக்கா கோவில் நிலங்களுக்கும் இடப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டன ..


இவ்வாறு செய்யும் காலத்து .. சிந்தாமணி கிராமத்து (தற்கால அண்ணாசிலை பகுதி ) மக்கள் தங்களது எதிர்ப்பை கிராமத்து எல்லையில் படுத்து தெரிவித்த விசயமும் சொல்லப்பட்டு உள்ளது ..(1198 ஆம் ஆண்டு நமது ஊர் எப்படி இருந்தது .. நமக்கு நாகரீகம் சொல்லிக்குடுத்தாக சொல்லப்படும்  வெள்ளைக்காரன் ஊர் எப்படி இருந்தது என்று உங்கள் முடிவுக்கே விடுகிறேன் )

இவ்வாறு தனியார் நிலங்கள் எடுக்கப்பட்டதற்கு மாற்றாக கொடதிட்டை (தற்கால கொத்தட்டை ) என்கிற கிராமம் அவர்களுக்கு மாற்றாக வழங்கப்பட்டது ..

காவேரி ஆறு ஸ்ரீரங்கத்திற்கு மேற்கே மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள புந்நாக தீர்த்தம் (நம்பெருமாள் ஜீயபுரம் செல்லும் போது இங்கு தீர்த்தவாரி கண்டருலுவார். எனது ஜீயபுரம் புகைப்பட, காணொளி காட்சிகளிலும் இதை காணலாம்) அருகில் இருந்து தென் புறமாக திருப்பி தற்போதைய இடம் வழியாக திருப்பப்பட்டது ..

திருவாழி பொருத்திய கற்கள் பற்றிய செய்திக்காக ஒரு படம் போட நினைத்தேன் .. அதற்காக அதே காலத்தை ஒத்த ஒரு படம் .


. இது தெற்கு உத்திர வீதியில் உள்ள மணவாள மாமுனிகள் சந்நிதி வாசலில் உள்ள பாண்டியன் காலத்து சின்னம் .வருடம் 1251 CE .

.இது அந்த அரசனின் தளபதி தஞ்சலூர் உடையான் வர்ந்தருவான் பல்லவராயன் திரிதண்டி சன்யாசிகளுக்கு கட்டியது ..(மணவாள மாமுனி இந்த கல்வெட்டு (மற்றும் மண்டபம் )வைத்த போது பிறந்திருக்கவில்லை!!!

பொன் வேய்ந்த பாண்டியன் காலத்து கல்வெட்டு 1251

இந்த மடம் கட்டப்பட்டபோது மணவாள மாமுனிகள் பிறக்கவே இல்லை !!! (அந்த சக்கர சின்னத்தை பல முறை அவர் தொட்டு இருக்ககூடும் !!) 
விஜயராகவன் கிருஷ்ணன்

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 1




திருவரங்கத்தின் சிறப்பே காவேரித்தாய் அரங்கனை மாலையாக பெருமை சேர்ப்பது எங்கும் காணாத ஒன்றே!!

இப்படியான ஒரு மிகப்பெரிய நதியை மூன்றாம் குலத்துங்க சோழன் (1178-1218) காலத்தில் தற்சமயம் உள்ள ராஜகோபுரம் அருகில் பாய்ந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து தற்போது இருக்கும் இடத்திற்கு கிட்ட தட்ட ஒரு கிலோ மீட்டர் தள்ளி கட்டு வித்த மிக வரலாற்று சிறப்பு மிக்க விசயம் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளை நீங்கள் இங்கு காண்கிறீர்கள் .

இந்த பதிப்பு வார நாட்களில் முழுமையாக வந்தால் படிக்க முடியாது என்பதால் சிறிது சிறிதாக எழுதலாம் என்று நினைக்கிறேன் ..


நாளையில் இருந்து இந்த கட்வேட்டுக்கள் மற்றும் இன்றைய தினம் அன்று காவேரி பாய்ந்த இடங்கள் எவை எவை என்று பார்ப்போம் .


.இதில் பல சுவாரசியமான விசயங்களை காண்போம் !!!


விஜயராகவன் கிருஷ்ணன்

Monday 23 March 2015

திருக்குறளப்பன் சந்நிதி , தெற்குவாசல் ஸ்ரீரங்கம்







திருக்குறளப்பன் சந்நிதி ..









ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் உள்ளே நுழைந்தவுடன் நாம் காணும் நான்கு கால் மண்டபமும் அதன் மேற்புறம் உள்ள சந்நிதியும் 1546 CE இல் தாத்தாச்சாரியார் என்பவற்றின் ஆணைப்படி ஸ்ரீரங்க தேவராயர் என்பவரால் கட்டப்பட்டது ..



இதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் படங்களாக இணைக்கப்பட்டுல்லன ..(இந்த கல்வெட்டு புத்தகத்தை எனக்கு குடுத்து உதவிய நண்பர் Deepak Ram அவர்களுக்கு என் நன்றிகள் பல...






இந்த கோவில் க்ராபக்ரஹாம் மற்றும் முன் மண்டபங்கள் .. முன்னே இன்று நாம் வீதியில் காணும் நான்கு கால் மண்டபம்கள் எல்லாம் செய்து வைத்தான் .

இந்த கோவிலின் கோபுரங்கள் 1859 புகைப்படத்தில் தெளிவாக தெரிந்தாலும் பின்னர் 1900 பிறகு எடுக்கப்பட்ட படங்களில் காணப்படவில்லை ..

மேலே காணும் 1780CE வரைந்த படத்தில் ஒரு தேர் இருப்பது இந்த கோவில் மிக சிறப்பாக ரதஉத்சவங்கள் நடைபெற்று இருந்தது தெறிக்கிறது ..


இந்த ஆலையம், தனியார் ஆலையம் என்று 1942 ஆண்டு அரசுடன் நடந்த கோர்ட் கேஸ் இல் தீர்ப்பாகி தற்போது ஆறு தாத்தாச்சாரியார் குடும்பங்களின் சுழல் முறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அன்றைய 1540 களில் வாழ்ந்த தாத்தாச்சாரியார் மிகப்புகழ் வாய்ந்தவராக இருந்திருக்கிறார் ... அவருடைய செல்வாக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தில் மிகுதியாக இருந்தமை கோவில் ஒழுகுவில் தெரிகிறது ...

இவர் வீரநாராயண எரி (தற்கால வீராணம்) ஏரிக்கு கரைகளை பலப்படுத்தவும் மதகுகளில் கற்கள் அமைக்கவும் பொருள் உதவி செய்ததாக தெறிக்கிறது ..

இந்த இடத்தில் இந்த ஆலயம் 1500 CE அமைய காரணம் ...இங்குதான் முன்னொரு காலத்தில் காவேரி நதி அரங்கனின் ஆலயத்தின் அருகே சென்று கொண்டு இருந்த காலத்தே முக்கியமான  படித்துறையாக இருந்தது...

அதை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் ....

மேல காணும் 1780CE வரையப்பட்ட படத்தின்  =>   HD print download   <=   செய்ய ..