Friday 23 March 2012

The Orlov diamond - 1747AD stolen from srirangam


so many people ask me about what happened to the gold and richness of Srirangam perumal once bestowed by our great kings... now this is the answer.... This is only one of the story known today... many a things have vanished .. and how much more the muslims would have taken away... 

The Orlov diamond 189.62 carats (37.924 g), is a large diamond that is part of the collection of the Diamond Fund of the Moscow Kremlin. The origin of this resplendent relic – described as having the shape and proportions of half a hen's egg. This diamond and a similar gem served as the eyes of the deity in the temple. Legends hold that a French soldier who had deserted during theCarnatic wars in Srirangam disguised himself as a Hindu convert and stole it during 1747.

Compare this with Koh-i-Noor diamond which is half this perumal's diamond.size!!! (105 carats (21.6grms)
this, as written would have another set of diamond adorned the eye of perumal moolavar... I feel lot and lot of things would have been hidden by our people from plunderers and as the age progresses would have forgotten it 

Saturday 17 March 2012

story of srirangam part -05(Kumbadam Renganathar)In English & Tamil


கும்படம் என்கின்ற பகுதியில் உள்ள ஒரு ரெங்கநாதர் படத்தை போட்டு அந்த இடம் பற்றி தேடி வருவதை நான்காம் பாகத்தில் எழுதி இருந்தேன் ... 


இந்த பெருமாளின் படத்தை பிரிண்ட் போட்டு பல பேரிடம் காட்டினேன் , அதில் எனது பாக்டரியில் வேலை பார்க்கும் ஒரு பெண் (திருமதி. கலா )என்பவர் மிக சரியாக இந்த கோவில் இருக்கும் இடத்தை கூறிப்பிட்டு உதவினார் . 


இந்த வீடியோவில் பார்க்கும் போது இந்த பெருமாளுக்கு அருகில் தரை எங்கும் சாக்கடை நீர் தேங்கி உள்ளது ... எல்லா புறமும் சுண்ணாம்புக் காரைகள் இன்னும் சில நாள் கூட இருக்காது போல் காணப்படுகிறது ... 
நாம் விரைந்து செயல் படாவிட்டால் இந்த கோவிலின் தொன்மையான கை வேலைப்பாடுகள் நம்மால் அறியமுடியாத படி மறைந்து போகும் .


இந்த இடம் மும்பை தாராவி போன்று மிக குறுகிய பாதைகள் கொண்ட பகுதியாக உள்ளது .. எனது தந்தையார் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம்  இந்த ஊரில் சுமார் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதால் அங்கு இருந்த ஒரு பெரியவருக்கு என்னை தெரிந்து இருந்தது,  எனது வேலையை சுலபமாக்கியது ..

இந்த கோவிலை சுற்றி வந்து பார்த்தவரையில் இதன் அஸ்திவாரம் சில வரிகள் கருங்கர்களாலும், ஒரு அடியிலிருந்து பழமையான செங்கல வரிசைகளால் ஆனதாக தெரிகிறது .. சுதை பல காலங்களில் திருத்தி அமைக்கப்பட்ட தாக தெரிகிறது .. இது கோவிலின் உள் ஒரு கோவிலாக காணப்படுவது ஒரு விநோதமே .. இந்த ரெங்க விமான அமைப்பே பிற்காலத்தில் ஏற்ப்பட்ட ஒன்றாக படுகிறது .. இந்த இடத்தின் பெருமையை அறிந்த எவரோ ... ஒரு மாடல் ரெங்க நாத கோவிலை உட்புறமாக இவ்வாறாக உருவாக்கி இருக்ககூடும் என நினைக்கிறேன் ... 



நான் அருகில் விசரித்தவரை சொந்தம் என்று கோர இந்த இடத்திற்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது .... 


நாம் இந்த இடத்தையும் சரிசெய்ய வேண்டும் அருகில் குடி இருப்பவர் மனதில் எதிர்ப்பு இல்லாமல் ...

google map of this place ::: it is just opp to srirangam highersecondary school .. a small neem tree is the land mark to enter a small lane to reach this temple... 



இதை செய்யும் முறை பற்றி அனைவரின் ஆலோசனை வேண்டுகிறேன் ....





In the last blog of no.4, i have written about a place called Kumbadam near east of srirangam where there is a renganathar temple which presumably constructed around 1340AD, when Nam perumal was away at Tirupathi.  


I took  a print out of this perumal picture and showed to lot of people .. one of my factory worker(obviously a lady,  named Mrs. Kala..) clearly identified this and told me the exact location opp to srirangam boys higher secondery school.. As you can see from the video... the floor is wet with sewage.. the lime martor plasting may not lost long and we may not know the real hand work of the past if we didnot act quickly.....


After a simple look over the temple.. (this place looks  like a tharavi slum, hardly few feet of passage with lot of houses!!) the people in all the houses asked me why i am here and who i am .. thank god my family lives in this place for over 75 years made my stay there acceptable !!!

the temple has granite wall upto a feet height and then old brick masonry ,the lime mortar hand works seems to have been redone many a times.. it is a temple inside a temple... the model renga vimaana to me , may be done in the later period than in 1340"s. may be some one who know the significance of this place would have done this... 





The place is not owned by any one.... it is now being used as a dump yard with out knowing its  significance i donot want to alert the people around that place which they may feel threatening their possession...
we need to save a place which i presume would have been of some significance connected to our past....






Kindly send me your suggestions about how to restore this place.... to my email id 


srirangamviji@gmail.com





Friday 16 March 2012

story of srirangam part -04- (1300 AD)in English & Tamil

திருவரங்கத்திற்கு , துலுக்கர்களால் ஏற்ப்பட்ட பெரும் கலாபத்திற்கு (1322 AD க்கு )பிறகு பெரும் துயரம் ஏற்பட்டது.. பிள்ளைலோகச்சரியார் அரங்கன் திருமேனியுடன் தென் திசை சென்ற வுடன் திருவரங்கத்து வாழ் மக்கள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்து சிறு சிறு கோவில்களை கட்டி அரங்கனை வழி பட்டு வந்தனர் ...

இதில் மணச்சநல்லூர் அருகில் உள்ள அழகிய மணவாளம் என்கிற ஊரின் உள்ள ஒரு பாழடைந் த கோவில் ஒன்று என் கவனத்தை கவருகிறது ... இதன் மிக அருகில் நாயக்கர் கால கட்டுமானத்தை ஒப்ப தற்போதிய அழகிய மணவாள பெருமாள் கோவில் இன்று வுள்ளது ... இந்த கோவிலை சுற்றி பின்னமான பல சிலைகள் காணப்படுகின்றன ...

என்னுடைய அனுமானம் ... அரங்கன் (13 th May 1371 ) திருவரங்கம் திரும்பியவுடன் அனைவரும் இந்த கோவிலை கைவிட்டு இருக்கக்கூடும் ... 











மேலும் அரங்கநாதர் ஸ்ரீரங்கத்தை விட்டு திருப்பதியில் இருந்து வந்த காலத்தில்,  திருபுவன சக்ரவர்த்தி குலசேகர பாண்டியன் 30 ஆண்டு(30.01.1344) கல்வெட்டு எண் 252, ARE no. 371 of 1953-54) ஆழ்வார் திருநாட்டுடைய பிரான் திருமாளிகையில் அழகிய மணவாளப் பெருமாள் என்பார் எழுந்தருல்வித்த ஸ்ரீரங்கநாதன் என்று குறிப்பு ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது ...


"குலசேகரன் என்று அழைக்கப்பட்டு வந்த ரவிவர்மன் ஒரு புரட்டாசி மாதத்தில் , ஸ்ரீரங்க நாதனுடைய விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து தீபோத்ஸவம் கொண்டாடினான் என்று பாண்டியர் காலத்துக் கல்வெட்டு குறிப்பிடுகிறது .. (srirangam incription NO. 281, ARE No. 46 of 1891)


இந்த கல்வெட்டுகலில் இருந்து ஸ்ரீரங்கம் பாழ் பட்டு இருந்தமையும் அரங்கனை பல்வேறு இடங்களில் வைத்து வழிபட்டதையும் அறியமுடிகிறது ..


மேல சொன்ன இடத்தையும் தாண்டி கிழக்கு அடையவளஞ்சான் திரு வீதிக்கு கிழக்கில் கும்படம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு ஸ்ரீரங்கநாதர் விக் ரஹ ம் மற்றும் கோபுர அமைப்புகள் , இந்த கல்வெட்டுகளை உறுதி படுத்துகின்றன ...(இந்தமேலே படத்தில்  காணும் கோவிலை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை ... தற்போதிய ஸ்ரீரங்கம் பெண்கள் மேல் நிலை பள்ளிக்கு எதிரில் உள்ள இடம் தான் இது .....இந்த கோவிலை பற்றி எவருக்கேனும் விவரம் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கலாம் ..

English version : -



 After facing great destruction of the place and people by the brutal and savaging muslim invaders, the people of srirangam deserted it to live in nearby forests..

They build their own temple for Lord Renganatha to their own ability and lot of devotion...

Even though there is no record of any sort to provide us with any correct information... I found one place worth taking note...
The place is azhgiyamanavalam, a small village near manachanallure.. There is a very small temple now built by  nayakas in their own distinctive  type temple architecture.. The pictures I have posted here is a small well build temple near that existing one..It is surrounded by lot of broken idols and alike of some Vishnu temple...
I presume that when Renganathar returned to srirangam (13 May 1371AD) people would have also abandoned this temple to  stay in srirangam...

There are two stone inscriptions found in the records of  srirangam ..
1. "thirupuvana sakravarthi kulasekara pandiyan 30th year of rule,   (30.01.1344AD) inscription No. 252. ARE NO. 371 of 1953-54).. States...
"aazhvaar thirunaattudiya piraan thirumaligaiyil azhgiya manavaalap perumal enbaar ezhun tharuvitha sriranganaathan"
2. srirangam inscription No.281, ARE NO.46 of 1891
states ..
"Kulasekaran enkira ravivarman oru purattasi maaththil sriranga nathanudiya vigrahaththai prthistai seithu theeboshthavan kondadinaan"
Apart from the place i felt... there is another one beyond the east adayavalanjon and opp to srirangam girls higher secondary school , kumbadam ... there is a temple with renganathar and arch type paravasudevar like that of srirangam temple....
i couldn’t find this place and this place needs out real research...
Those who have seen anything like this there may contact me ....


Wednesday 14 March 2012

story of srirangam part - 03(English version at the bottom)



பாகம் - 03





பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக மோசமாக தொடங்கியது பாண்டியர்களுக்கும், முழுமையாக தென் இந்தியர்களுக்கும்... டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள், பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த தமிழகத்தை சூறையாட முடிவு செய்தனர் ....


அவர்கள் மத்திய இந்தியாவில் நிலை கொண்டு இருந்த போது வட கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சளர்கள் தங்களது பெரும் பொன் அணிகலன்களை ஸ்ரீரங்கம் அருகில் உள்ள சமய புரம் என்கிற ஊரில் உள்ள சிவன் கோவிலில் பொன் கூரை வேய்ந்து, சேமித்து வைத்திருக்கிறார்கள் என்கின்ற செய்தியை அறிந்து ... அதை அடைய திருச்சியை நோக்கி பெரும் படையுடன் வந்தார்கள் ....


1311 ஆம் ஆண்டு மாலிக் காபூர் , இந்த கோவிலை அடைந்து அனைத்து செல்வங்களையும் கொள்ளை கொண்டு .. அங்கு உறைந்திடும் அம்பாள கல் திருமேனியை தனது கரங்களால் உடைத்த்தெறிந்தான் ... இந்த திருக்கோவிலை உடைத்தெறியும் புகை மண்டலங்கள் கொள்ளிடம் ஆற்றில் துணி துவைத்துக்கொண்டு இருந்த ஈரம் கொல்லிகளை (this is the tamil name for washerman during 14th century!!!) ஸ்ரீரங்கத்தினுள் சென்று அனைவரையும் எச்சரிக்கை செய்தனர் ..இந்த எச்சரிக்கை அரங்கநாதர் திருவுருவச்சிலையை மற்றும் தாயார் திருவுருவ சிலையை பாதுகாக்க கால அவகாசத்தை கொடுத்தது .... ஸ்ரீரங்கத்தில் அப்போது நிகமாந்த தேசிகர் , பிள்ளை லோகசாரியார் போன்ற ஆச்சா ரியர்கள் வாழ்ந்து வந்தார்கள் ...




இவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறினார்கள் , பிள்ளை லோகச்சரியார் அரங்கன் திருமேனியியை தாங்கி தென் திசை நோக்கி சென்று மதுரை அருகே அழகர் கோவிலில் தங்கினார் ....பின்பு ஜ்யோதிச்குடி என்கிற வூரில் நோய்வாய் பட்டு மறைந்தார் ..1322 உலுக்க்ன் படை எடுப்பிர்க்கு பிறகு ஸ்ரீரங்கம் மனிதர் வாசம் இல்லாத பகுதியாக மாறியது , அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த நிகமாந்த தேசிகன் உலுக்கன் கானை (பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று முடிசூட்டிக்கொண்ட வன் )சந்தித்தாக ஒரு பரம்பர கதை உண்டு பின்னர் தேசிகர் சத்தியமங் களம் சென்று வாழ்ந்தார் . .திருவரங்கத்தில் வாழ்ந்த பல்லாவிறவர் அன்று தன்னுயிர் ஈன்று அரங்கன் திருமேனியை காத்ததால் ,இன்று நாம் பல சேவைகளை கண்டு மகிழ்கிறோம் ...அன்று திருவரங்கத்து மக்களையும் அரங்கன் திருமேனியையும் காத்து பல மறைமுக திட்டங்களை தீட்டி காத்த பிள்ளை லோகச்சரியரை நாம் ஒவ்வொருவரும் வணாங்கி போற்ற வெண்டும்












இவ்வாறாக இந்த கதைகளை பற்றி அறிந்து நான் இந்த முக்கித்துவம் ஆன இந்த சிவன் கோவிலை தேடி என் நண்பர்ருடன் சென்றேன் (19th September 2010, evening 7PM)... சமயபுரம் அருகில் இப்போது உள்ள tollgate அருகில் இந்த கோவிலை கண்டுபிடித்தோம் ... நாங்கள் சென்றே நேரம் அந்த கோவில் குருக்கள் கோவிலை சாத்திவிட்டு வந்து கொண்டு இருந்தார் ... (ஒரு காலத்தில் தென் இந்தியாவின் தலைனாகராக இருந்த இடத்தின் கோவில் ஆள் இல்லாமல் இருக்ககண்டேன் )


பிறகு வழக்கமான வழிபாட்டிற்கு பிறகு மேற்படி விவரித்த முஸ்லிம் படையெடுப்பையும் இந்த கோவில் அழிக்கப்பட்டதையும் சொன்னேன் ,,, அந்த கோவில் காவலாளி அப்போது ஒரு விசயத்தை சொன்னார், கோவில் புனரமைப்பு வேலை நடை பெறுவதால் அன்று காலை கோவிலை சுற்றி மணலில் புதைந்து இருந்த பல பழைய கற்களை இயந்திர உதவி கொண்டு வெளியில் கொட்டி இருக்கிறார்கள் ... (ஆம் அன்று காலைதான் )






நான் உடனே அவைகளை பார்க்க வேணும் என்று கூறி வெளியில் சென்று பார்த்தல் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிற்கு கற்க்குவியில் காணப்பட்டது .... நான் இதில் ஏதாவது அம்மன் சிலை காணப்படுகிறதா என்று கேட்டேன் .. அந்த காவலாளி ஒரு பெரிய கல் பாறை அடியில் உள்ள ஒரு சிலையை கண்டதாக சொன்னார் ... என்னுள் மிகப்பெரிய மின்சாரம் பாய்ந்தார் போல் இருந்தது .... 1230 ஆம் ஆண்டு ஹொய்சள மன்னனால் கட்டப்பட்டு 1311AD இல் மாலிக்காபூர் ஆல் தன் கையால் பின்னப்படுத்தப்பட்ட அம்பாள சிலையை காணப்போகிற எண்ணம் மனத்தையும் மீறி உடலையும் ஆட்கொண்டது ...

அந்த மாலை நேர இருளில் கை விளக்கு கொண்டு தேடி அந்த அம்பாள திருமேனியை நிமிர்த்தி வைத்து பார்த்த காட்சியை தான் நீங்கள் காண்கிரீகள் ......




































மேற்க்கண்ட சிலை கடந்த மாதம் (Feb 2012) வரை மழையில் கிடந்தது .. பிறகு எனது பல முயற்சிகளுக்கு பிறகு அரசு அருங்கட்சியகதுக்கு மாற்றப்பட்டுள்ளது ...

The english version :-






11 century dawns on tamilnadu as well as south india in a very bad note..The delhi sultans decided to plunder the south.When they are stationed in northern karnataka , they heard about the richness, the hoysalas stored in their second capital in Kannanur near samayapuram and the richness of that siva temple..


1311, malikkafur invaded this part of the country and plundered this siva temple and destroyed the temple to rumbles , the dust which rose alarmed the washer man in the colidam riverbed. who in turn cautioned the people of srirangam.. it gave srirangam people enough time to move perumal out of srirangam and sealed the main sanctum sanctorum with a wall .during this period Nigamantha desikar and pillailogachariar were living in srirangam ..


pillailoagachariyar took to the south route and ended up near madurai with perumal , latter he died in jyothiskudi due to illness..


during this and after another 1322 invasion by Ulugh Khan (he is non other than famous mohamad bin thuklak , made srirangam a deserted place (Nikamantha Desigan, vaishnava sambrathaya aacharya ,it is learned to have met him , but some dispute that.. he also left for sathyamangalm ..

because of these so many people's scarifies we are able to enjoy the nam perumal deity today..


we should profoundly pay our gratitude to pillailogachariyar for his immense statesmanship and wit and valor fitting a king for leading from the front with his bakthi alone for saving srirangam temple... leave alone his contributions in form of writings... every devotee of renganatha should now bow his head in honor of that great and brave soul.... (his statue picture is shown above)

on 19th September, 2010 around 7 PM i went in search of this temple, and found it near the current day toll gate on the trichy chennai high way near samayapuram.. when we are approaching the temple the priest was leaving the temple (This was the main temple of capital of south india in 1200AD ,with no other soul insight )


after the regular worship and during the chat with the priest and only one another person, the watchman of the temple , i elaborated the muslim invasion and destruction of this temple...The watch man told me, that morning the renovation team has moved a large destructed temple stones with machinery outside the walls of the temple and took me to a place to a size of a tennis court full of old temple stones... i asked them is there any amman deity found in this heaps?? he told me that there is one under a big boulder ... my heart races to see a thing no one has seen for the past 800 years... (this temple was build by hoysalas in 1230AD and destroyed by Malik kafur in 1311). The main deity will always be destroyed by malik kafur by his own hands according to legend ..


The above pictures are taken by me while i personally took this deity out with the help of some locals....


after a long persuasion by me to the authorities, this deity is now at the custody of govt ...





































Tuesday 13 March 2012

Story of Srirangam part - 02 (in English and Tamil )





முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்,இவ்வாறாக அரங்கனுக்கு பொருள் சேர்த்த விதத்தை விளக்கும் பக்கங்களில், அவன் கண்ணனூர் குப்பத்தை கைபற்றிஅங்கிருந்து பல போகிஷங்களை மற்றும் யானை குதிரை முதலியவற்றை எடுத்து சென்றதை கூறுகிறது ... மற்றும் அப்போது அங்கு ஆண்டு வந்த ஹோய்சலா மன்னன், இரண்டாம் வீர நரசிம்மா மகனான வீர சோமேஸ்வரரனை கொன்று அனைத்தையும் தன வசமாகியதாக முடிகிறது... இதில் வீர சோமேஸ்வரன், (1235–1254) ஸ்ரீரங்கத்துக்கு அருகில் தற்போதைய பெரியார் நகர அருகில் உள்ள வீரேஸ்வரம் என்கிற கிராமத்தையும், வயலூர் செல்லும் வழியில் உள்ள சோமரசம்பேட்டை என்கிற கிராமத்தையும் உருவாக்கினான் ...அதை பற்றிய குறிப்பு சிவன் கோவிலில் காட்டப்பட்டுள்ளது ...
(மூன்று தெருக்களாக இன்று ஸ்ரீரங்கத்தில் உள்ள வீரேஸ்வரம் 1250 AD இல உருவாக்கப்பட்ட ஒரு கிராமம் என்று அறிவது ஆச்சர்யமான செய்தியே )


some of friends wants a english translation for the above


Sadayavarman Sundara Pandyan I, invaded Hoysala dominions along the river kaveri and captured the fortress of Kannanur Koppam great amount of loot was captured along with many horses,elephants A later attempt by Someshwara to invade Pandyan kingdom ended in his defeat and death..


The place which is now near Periyaar nagar called Veereshwaram and somarasam pettai on the road to vayalure were the villages created by Vira Someshwara according to some stone inscriptions ..(which is now placed in a board ...)
it is amazing to know that ...having just three streets now on the way near mambalasalai ... veereshwaram .. smallest nagar in srirangam was created in 1250 and still surviving ...

Story of Srirangam - part- 01 - 1200 AD


                                      போஜீஸ்வரா கோவில் சமயபுரம் 


பாகம் - 01




எனது நண்பர் ரெங்கநாதன் (Hindu reporter karur)அவர்தம்


ஆசிரியர் எழுதிய " ரெங்கராட்டினம்" என்கிற ஒரு புத்தகத்தை

பற்றி கூறி ... அதன் சாராம்சத்தை பற்றியும் சொன்னார்..

வீர நரசிம்மா II (1220–1235),ஹொய்சள ராஜா, கர்நாடகாவை
ஆண்டு வந்த காலத்தில் ஒரு பெரும் தங்கப் புதையல் கிடைத்திட்டது
.அவனது அரசபையில் இருந்த மந்திரி ஒருவர், இந்த தங்கம் தோஷம்
உள்ளதாக காணப்படுகிறது, எனவே இதை நாம் கைகொள்ள வேண்டாம்
என்று தடுத்துக் கூறினார்...

இந்த தங்கத்தை கைக்கொள்ளும் எவருக்கும் கடுமையான சோதனைகள்
ஏற்ப்படும் என்றும் எச்சரித்து, அதை தடை செய்ய எத்தனித்தார்... அரசன்
அவரை மறுத்து ... சிறை கொண்டான்.

தமிழக அரசியல் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன ... சோழ பாண்டிய சண்டைகள் உச்சத்தை அடைந்தன... மூன்றாம் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் பாண்டியர்கள் கை ஓங்கி சோழர்கள் ஆளுமை மங்கத்துடங்கியது ...
இரண்டாம் வீர நரசிம்மன் தனது மருமனான மூன்றாம் ராஜராஜ சோழனுக்காக தமிழகத்தில், ஸ்ரீரங்ககத்துக்கு அருகில் கண்ணனூர் குப்பம் (இன்றய சமயபுரம் ) என்கிற ஊரை தன இரண்டாம் தலைநகராக கொண்டு ஒரு சிவாலயம் (அதன் தற்போதைய படம் இணைக்கப்பட்டுள்ளது ) கட்டுவித்து பொன் கூரை வெய்து (மேற சொன்ன குறை உடைய பொன் புதையலை சேமித்து வைத்து ஆண்டு வந்தான்..
இந்த கால கட்டத்தில் சுந்தர பாண்டியன் சோழ அரசனை வென்று அவனை சிறை பிடி த்து சென்றான் .... அதனுடன் இக் கோவில் போகிஷங்களையும் கவர்ந்து சென்றான் ...

சுந்தர பாண்டியன் கவர்ந்து சென்ற இந்த தங்கத்தை திருவரங்கத்து அரங்கனுக்கு அளித்திட முடிவு செய்து, அன்றைய தின அதிகாரிகளை மற்றும் ஆச்சார்யர்களை அணுகினான் ..

இதனிடையில் ,ஹொய்சள ராஜாவால் கைது செய்யப்பட்ட மந்திரியின் புதல்வி ஸ்ரீரங்கம் சென்று இந்த தோஷம உள்ள தங்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று அனைவருக்கு வேண்டுகோள் விடுத்தாள்... பல டன் எடை உடைய அந்த தங்கத்தை ஸ்ரீரங்க வாசிகள் தம்மை ஆளும் பாண்டிய ராஜாவிடம் இருந்து பெற மறுத்தனர் .(ஒரு நூறு ரூபாய் இன்று கோவிலில் என்ன மரியாதையை பெற்றுத்தரும் என அனைவரும் அறிவீர் ) மன்னன இரண்டு ஆண்டுகள் பல வழிகளில் போராடி .. அரங்கனுக்கு பொன் கூரை வேயவும், மற்றும் சந்துனு மண்டப சுவர்களில் அலங்கரிக்கவும் ஒப்புக்கொண்டார்கள் .. (பொன் வெய்த பாண்டியன் , மதுரைய மீட்ட சுந்தர பாண்டியன் இவனே )
அரங்கன் ஏன் இந்த தோஷமுள்ள தங்கத்தை பெற்றான் என்பதை வரும் நாட்களில் பார்ப்போம் ...