அரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – பாகம் -1
இந்த காலகட்டத்தை அறிய நமக்கு இருக்கும் குறிப்புகள். கோவிலொழுகு மற்றும் சில கல்வெட்டு குறிப்புகள், மதுரா விஜயம் போன்ற இலக்கிய சுவடிகள்..
கோவிலொழுகு பல பதிப்புகள் காணப்படுகின்றன .. என்னிடம் இருக்கும் 1909 ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சென்னை அனந்த முத்திராக்ஷ்ர சாலை பதிப்பில் அரங்கன் உலா .. பிள்ளோகாசாரியர் தென்திசை அரங்கனை எழுந்தருளப்பண்ணி கொண்டு போன விசயம் இல்லாமல் துளுக்கநாச்சியாரிடம் டெல்லியில் இருந்த பிரவாபம் மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறது !! அங்கிருந்து திரும்பவும் வரும் வழியில் திருமலையில் இருந்ததாக சொல்லி இருக்கிறது ..
எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் பல பதிப்புகளை சோதித்து இதை இரண்டா பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என சாதித்துள்ளார்.. 1311 இல் முதலில் வந்த மாலிக்காபூர் படை எடுப்பின்போது டெல்லி சென்று விட்டு பின்னர் 1323 முகமது பின் துக்ளக் படை எடுப்பின்போது தென்னாடு விஜயத்தை அழகியமணவாளன் மேற்கொண்டார் என்று இதை பொருள் கொள்வதே சரி என்று எழுதி உள்ளார்... நாமும் அப்படியே செய்வோம் ..
1323 முகமது பின் துக்ளக் படையெடுப்பை “பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோவிலொழுகு குறிப்பிடுகிறது..
இன்றும் இந்த 12,000 பேருக்கு திதி கொடுக்கப்பட்ட இடமாக கோபுரப்பட்டி (திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமம் ) சிறு ஆறு காட்டப்படுகிறது !! இதை வரும் நாட்களில் பார்ப்போம் , மெல்ல நிறைய விசயங்களை எழுத ஆசை ..
இரண்டாம் முறை படையெடுத்து துலுக்கன் வருகிறான் என்கிற செய்தி கிடைத்த உடன் அரங்கனிடமே திருவுல சீட்டு கேட்டு ..தொடர்ந்து திருவிழா நடக்க திருஉள்ளம் சாதிக்க .. அழகியமணவாளனை கொள்ளிடக்கரை அருகே இருந்த பன்றி ஆழ்வான் கோவிலில் பலிவெட்டு மண்டபத்தில் எழுந்ததருளப்பண்ணி இருக்கையில் .. துலுக்கன் சமயபுரம் தாண்டி ஸ்ரீரங்கத்தின் உள்ளே நுழைந்த செய்தி கேட்டு .. பெருமாளை பக்தர்களுக்கு அறியாமல் பல்லக்கில் எழுந்தருளப்பண்ணி கொண்டு பிள்ளைலோகாச்சாரியார் மற்றும் பலர் தென் திசை நோக்கி சென்றார்கள்.
முதல் முறை படை எடுத்து வந்த மாலிக்காபூர் கொள்ளை அடிக்க மட்டுமே வந்தான் ..அவன் ஆட்களை கொல்லவில்ல, படை வீரர்களையும் விட்டுவிட்டும் செல்லவில்லை .. இரண்டாம் முறை வந்த துக்ளக் இரண்டும் செய்தான் ...
துக்ளக்கினால் விடப்பட்ட தளபதி சந்தன மண்டபத்தில் தங்கி இருந்து ஸ்ரீரங்கம் கோவில் தாசிகளால் சுகப்பட்டுக்கொண்டு அவர்களால் தடுக்கப்பட்டு மேலும் பல பெரும் சேதம் கோவிலுக்கு இல்லாமல் வசித்து வந்தான் ..
நாம் முன்னமே கண்ட படி கூரநாராயண ஜீயர் சுவாமிகள் செய்து வைத்த பல மந்தர கட்டுகளால் அவன் உடல்நலம் குன்றி ஸ்ரீரங்கத்தை விட்டு விலகி சமயபுரம் அருகே உள்ள போஜீஷ்வரர் கோவிலை இடித்து அதனை கொண்டு மாளிகை அமைத்து வாழ்ந்து வந்தான்.
அன்றைய தின கோவிலின் காணியாளன் சிங்கப்பிரான் என்கிற பிராமணர் தாசிகளின் துணை கொண்டு அரங்கன் கோவிலை பூஜிக்க அனுமதி அந்த தளபதியிடம் பெற்றனர்..
இந்த காலகட்டத்தில் திருவரங்க மாளிகையார் என்கிற திருமேனியை பண்ணி வைத்து அழகியமணவாளனுக்கு மாற்றாக பிரதிஷ்டை செய்தனர்.. திருவரங்க மாளிகையார் என்கிற இந்த மூர்த்தி மூலஸ்தானத்தில் பெரிய பெருமாள் திருவடி அருகில் வலது ஓரத்தில் இருப்பார்
அரங்கன் காணாமல் போன அந்த பன்றியாழ்வான் கோவிலை தேடி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன் .. அது ராமானுஜர் தினமும் குளிக்கும் தவாராசன் படித்துறை தெற்கே அமைந்தது என்று அறிந்து எனது ஆசான் கிருஷ்ணமாச்சரியரை பேட்டி கண்டேன் .. அதன் காணொளி .....
========================>>>>>>>>>>>>>
Video
<<<<<<<<<<<<<<<<<=================
ஸ்ரீரங்கத்தின் மக்கள் என்ன ஆனார்கள்? பாழ்பட்ட ஸ்ரீரங்கத்தை எப்படி பலர் புனர்நிர்மானிக்க உதவினார்கள் என்று பார்ப்போம் ..