அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய
சரித்திர மாற்றமும் :- பாகம் – 02
திருமலையில் இருந்த அரங்கனை தனது நாட்டிற்கு (செஞ்சிக்கு) எழுந்தருளப்பண்ணி அங்கே பல உத்சவங்கள் கொண்டாடி கொண்டு இருகிறார் கோபணார்யன் என்கிற செய்தி ஸ்ரீரங்கத்தை அடைந்தது ..
அன்றைய தினம் ஸ்ரீரங்கத்தில் பலர் வசிக்கவில்லை ..அது மிகவும் பாழ்பட்டு இருந்தது ..1323 முகமது பின் துக்ளக் கொடூர தாக்குதலால் பலர் இறந்தும் ஸ்ரீரங்கத்தை விட்டும் தப்பி ஓடிவிட்டனர் ..
ஸ்ரீரங்கம் கோவில் தற்போதைய சந்தனு மண்டபத்தில் முஸ்லிம் படைத்தளபதி ஒருவன் தங்கி இருந்து .. எவரையும் வழிபடவிடாமல் செய்து வந்தான் ..
இந்த இடத்தில் இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும் ... நமது ஸ்ரீரங்கநாராயண ஜீயர் பட்டத்தை அலங்கரித்து இருந்த “கூரநாராயண ஜீயர் “ சுவாமிகள் (இவர் மூன்றாம் குலத்துங்க சோழன் காலத்தே வாழ்ந்தவர் (1178-1218 AD) ) பலவித மந்திர கட்டுகளை நமது அரங்க மாநகருக்கு செய்து வைத்தவர் .. இவரது திருவுருவ சிலை நமது திருகொட்டாரத்தில் தூணில் உள்ளது ... இவர் ஸ்ரீரங்கத்திற்கு செய்த மந்திரபூர்வமன பணிகள் அளப்பிட முடியாது ..(தனியாக அதை எழுதுகிறேன் )
திருவரங்கத்தை சுற்றி நரசிம்ஹர் கோவில்களை நிறுவினார் ... காவேரி ஆற்றை மாற்றி அமைத்தார் (இது ஒரு irrigation engineering marvel )
சிறிது காலம் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே வாழ்ந்த சூல்தான் பிறகு பல நோய்களுக்கு உட்பட்ட அதற்கு ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மந்திர தன்மைகள் காரணம் என்று எண்ணி பயந்து ..சமயபுரம் அருகே தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு வாழ்ந்தான்..
துலுக்கர்கள் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கத்தில் அப்போது வசித்து வந்த சிங்கராயன்னும் பின்னர் அவரது புதல்வர் திருமணதூண் நம்பி என்போரும் அந்த துலுக்கனை சகாயம் பண்ணி அரங்கனை சிறிய அளவில் ஆராதிக்க அனுமதி பெற்று இருந்தனர் ..
இந்த காலத்தில் செஞ்சியில் நம்பெருமாள் இருப்பதை அறிந்த திருமனதூண்நம்பி .. உததமநம்பியை செஞ்சிக்கு அனுப்பி .. கண்ணனூரில் உள்ள சூல்தானின் படை பலம் மற்றும் பல்வேறு விசயங்களை எடுத்து சொல்லி .. கோபணார்யனை படை எடுத்து வரும் படி செய்தார் ..
தற்கால போஜிஸ்வரர் கோவிலில் ஒரு சிறு கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்த சூல்தானை வெல்ல விஜயநகர சாம்ராஜியத்தை நிறுவிய ஹரிரரின் மகனான விருப்பண்ண உடையாரின் தலைமையில்(பன்றிக்கொடி கொண்டு .. உலகை தாங்கிய வராக பெருமான் கொடி சின்னம் ஏந்தி ) ஒரு 70000 போர் வீரர்களுடன் கொபனார்யன் நம்பெருமாளையும் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு தற்கால மணச்சநல்லூர் மேற்கே உள்ள கோபுரப்பட்டி என்கிற ஊரில் நம்பெருமாளை நிலை படுத்தி மூன்று மாதங்கள் கடுமையான போர் நிகழ்த்தி ... எதிர்புறம் சுமார் 100000 பேர் கொண்ட (காக்கை சின்னக்கொடி ஏந்திய துலுக்கர் ) படையை வெல்ல உபயம் தினமும் அரங்கனை வேண்டி ... ஒரு தாசியை அனுப்பி அவள் மூலமாக அந்த சுல்தானை விஷம் வைத்து கொன்று ... அந்த படைகளை வென்று ...
அரங்கனை திருவரங்கத்தில் பெரியபெருமாளுடன் பிரதிஷ்டிப்பித்து ..
1341 ஆண்டு ஹோசாள மன்னனால் வெல்லமுடியாத அதே சுல்தான் படைகள் அரங்கன் “ரெங்கராஜனாக” தலைமைஏற்று வந்த போது தோல்வியுற்று .. தமிழகமெங்கும் அவர்கள் வேர் அறுக்கப்பட்டு ராமேஸ்வரம் வரை சென்று விருப்பண்ண உடையார் வெற்றிக்கொடியை நாட்டி தாம்பிரபரணி ஆற்றங்கரையில் தென் இந்தியாவில் எந்த ஒரு துலுக்கரும் இல்லை என்கிற செய்தியையும் ..பல கோவில்களை மறுபடி நிர்மாணம் பண்ணும் விதமாக ஒரு பெரிய விஜயஸ்தம்பம் கட்டு வைத்த செய்தியையும் அறிகிறோம் ..இவை அனைத்தும் சுமார் 1371-78 குள் நடைபெற்றன!!!
எங்கெல்லாம் சனாதன தர்மம் அழிகிறதோ அங்கெல்லாம் நான் வருவேன் என்று கீதையில் கண்ணன் சொன்ன வார்த்தையை உண்மையாக்கிய ஒரே தெய்வம் நமது அரங்கனே !! நாம் தென் இந்தியாவில் மட்டும் காணும் இவ்வளவு தேர்ச்சி பெற்ற கோவில்களும் ஆன்மீக ஸ்தலங்களும் அரங்கனின் கொடையே !!!
இன்னும் சில நூற்றாண்டுகள் கடந்து செல்வோம் ... காத்திருங்கள் !!!
"எங்கெல்லாம் சனாதன தர்மம் அழிகிறதோ அங்கெல்லாம் நான் வருவேன் என்று கீதையில் கண்ணன் சொன்ன வார்த்தையை உண்மையாக்கிய ஒரே தெய்வம் நமது அரங்கனே !! நாம் தென் இந்தியாவில் மட்டும் காணும் இவ்வளவு தேர்ச்சி பெற்ற கோவில்களும் ஆன்மீக ஸ்தலங்களும் அரங்கனின் கொடையே !!!" மிகவும் உண்மையான, சத்தியமான வார்த்தைகள். ஸ்ரீரங்க ஸ்ரீ ஜயது!
ReplyDelete