Saturday, 9 January 2016

அரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – பாகம் -1



அரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – பாகம் -1

இந்த காலகட்டத்தை அறிய நமக்கு இருக்கும் குறிப்புகள். கோவிலொழுகு மற்றும் சில கல்வெட்டு குறிப்புகள், மதுரா விஜயம் போன்ற இலக்கிய சுவடிகள்..

கோவிலொழுகு பல பதிப்புகள் காணப்படுகின்றன .. என்னிடம் இருக்கும் 1909 ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சென்னை அனந்த முத்திராக்ஷ்ர சாலை பதிப்பில் அரங்கன் உலா .. பிள்ளோகாசாரியர் தென்திசை அரங்கனை எழுந்தருளப்பண்ணி கொண்டு போன விசயம் இல்லாமல் துளுக்கநாச்சியாரிடம் டெல்லியில் இருந்த பிரவாபம் மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறது !! அங்கிருந்து திரும்பவும்  வரும் வழியில் திருமலையில் இருந்ததாக சொல்லி இருக்கிறது ..

எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் பல பதிப்புகளை சோதித்து இதை இரண்டா பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என சாதித்துள்ளார்.. 1311 இல் முதலில் வந்த மாலிக்காபூர் படை எடுப்பின்போது டெல்லி சென்று விட்டு பின்னர் 1323 முகமது பின் துக்ளக் படை எடுப்பின்போது தென்னாடு விஜயத்தை அழகியமணவாளன் மேற்கொண்டார் என்று இதை பொருள் கொள்வதே சரி என்று எழுதி உள்ளார்... நாமும் அப்படியே செய்வோம் ..


1323 முகமது பின் துக்ளக் படையெடுப்பை “பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோவிலொழுகு குறிப்பிடுகிறது..

இன்றும் இந்த 12,000 பேருக்கு திதி கொடுக்கப்பட்ட இடமாக கோபுரப்பட்டி (திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமம் ) சிறு ஆறு காட்டப்படுகிறது !! இதை வரும் நாட்களில் பார்ப்போம் , மெல்ல நிறைய விசயங்களை எழுத ஆசை ..

இரண்டாம் முறை படையெடுத்து துலுக்கன் வருகிறான் என்கிற செய்தி கிடைத்த உடன் அரங்கனிடமே திருவுல சீட்டு கேட்டு ..தொடர்ந்து திருவிழா நடக்க திருஉள்ளம் சாதிக்க .. அழகியமணவாளனை கொள்ளிடக்கரை அருகே இருந்த பன்றி ஆழ்வான் கோவிலில் பலிவெட்டு மண்டபத்தில் எழுந்ததருளப்பண்ணி இருக்கையில் .. துலுக்கன் சமயபுரம் தாண்டி ஸ்ரீரங்கத்தின் உள்ளே நுழைந்த செய்தி கேட்டு .. பெருமாளை பக்தர்களுக்கு அறியாமல் பல்லக்கில் எழுந்தருளப்பண்ணி கொண்டு பிள்ளைலோகாச்சாரியார் மற்றும் பலர்  தென் திசை நோக்கி சென்றார்கள்.


முதல் முறை படை எடுத்து வந்த மாலிக்காபூர் கொள்ளை அடிக்க மட்டுமே வந்தான் ..அவன் ஆட்களை கொல்லவில்ல, படை வீரர்களையும்  விட்டுவிட்டும் செல்லவில்லை .. இரண்டாம் முறை வந்த துக்ளக் இரண்டும் செய்தான் ...




துக்ளக்கினால் விடப்பட்ட தளபதி சந்தன மண்டபத்தில் தங்கி இருந்து ஸ்ரீரங்கம் கோவில் தாசிகளால் சுகப்பட்டுக்கொண்டு அவர்களால் தடுக்கப்பட்டு மேலும் பல பெரும் சேதம் கோவிலுக்கு இல்லாமல் வசித்து வந்தான் ..


நாம் முன்னமே கண்ட படி கூரநாராயண ஜீயர் சுவாமிகள் செய்து வைத்த பல மந்தர கட்டுகளால் அவன் உடல்நலம் குன்றி ஸ்ரீரங்கத்தை விட்டு விலகி சமயபுரம் அருகே உள்ள போஜீஷ்வரர் கோவிலை இடித்து அதனை கொண்டு மாளிகை அமைத்து வாழ்ந்து வந்தான்.

அன்றைய தின கோவிலின் காணியாளன் சிங்கப்பிரான் என்கிற பிராமணர் தாசிகளின் துணை கொண்டு அரங்கன் கோவிலை பூஜிக்க அனுமதி அந்த தளபதியிடம் பெற்றனர்..

இந்த காலகட்டத்தில் திருவரங்க மாளிகையார் என்கிற திருமேனியை பண்ணி வைத்து அழகியமணவாளனுக்கு மாற்றாக பிரதிஷ்டை செய்தனர்.. திருவரங்க மாளிகையார் என்கிற இந்த மூர்த்தி மூலஸ்தானத்தில் பெரிய பெருமாள் திருவடி அருகில் வலது ஓரத்தில் இருப்பார்





அரங்கன் காணாமல் போன அந்த பன்றியாழ்வான் கோவிலை தேடி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன் .. அது ராமானுஜர் தினமும் குளிக்கும் தவாராசன் படித்துறை தெற்கே அமைந்தது என்று அறிந்து எனது ஆசான் கிருஷ்ணமாச்சரியரை பேட்டி கண்டேன் .. அதன் காணொளி .....

========================>>>>>>>>>>>>>


Video


<<<<<<<<<<<<<<<<<=================



ஸ்ரீரங்கத்தின் மக்கள் என்ன ஆனார்கள்? பாழ்பட்ட ஸ்ரீரங்கத்தை எப்படி பலர் புனர்நிர்மானிக்க உதவினார்கள் என்று பார்ப்போம் ..






Tuesday, 5 January 2016

அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 02


அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 02



திருமலையில் இருந்த அரங்கனை தனது நாட்டிற்கு (செஞ்சிக்கு) எழுந்தருளப்பண்ணி அங்கே பல உத்சவங்கள் கொண்டாடி கொண்டு இருகிறார் கோபணார்யன் என்கிற செய்தி ஸ்ரீரங்கத்தை அடைந்தது ..


அன்றைய தினம் ஸ்ரீரங்கத்தில் பலர் வசிக்கவில்லை ..அது மிகவும் பாழ்பட்டு இருந்தது ..1323 முகமது பின் துக்ளக் கொடூர தாக்குதலால் பலர் இறந்தும் ஸ்ரீரங்கத்தை விட்டும் தப்பி ஓடிவிட்டனர் ..


ஸ்ரீரங்கம் கோவில் தற்போதைய சந்தனு மண்டபத்தில் முஸ்லிம் படைத்தளபதி ஒருவன் தங்கி இருந்து .. எவரையும் வழிபடவிடாமல் செய்து வந்தான் ..

இந்த இடத்தில் இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும் ... நமது ஸ்ரீரங்கநாராயண ஜீயர் பட்டத்தை அலங்கரித்து இருந்த “கூரநாராயண ஜீயர் “ சுவாமிகள் (இவர் மூன்றாம் குலத்துங்க சோழன் காலத்தே வாழ்ந்தவர் (1178-1218 AD) ) பலவித மந்திர கட்டுகளை நமது அரங்க மாநகருக்கு செய்து வைத்தவர் .. இவரது திருவுருவ சிலை நமது திருகொட்டாரத்தில் தூணில் உள்ளது ... இவர் ஸ்ரீரங்கத்திற்கு செய்த மந்திரபூர்வமன பணிகள் அளப்பிட முடியாது ..(தனியாக அதை எழுதுகிறேன் )


திருவரங்கத்தை சுற்றி நரசிம்ஹர் கோவில்களை நிறுவினார் ... காவேரி ஆற்றை மாற்றி அமைத்தார் (இது ஒரு irrigation engineering marvel )


சிறிது காலம் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே வாழ்ந்த சூல்தான் பிறகு பல நோய்களுக்கு உட்பட்ட அதற்கு ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மந்திர தன்மைகள் காரணம் என்று எண்ணி பயந்து ..சமயபுரம் அருகே தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு வாழ்ந்தான்..


துலுக்கர்கள் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கத்தில் அப்போது வசித்து வந்த சிங்கராயன்னும் பின்னர் அவரது புதல்வர் திருமணதூண் நம்பி என்போரும் அந்த துலுக்கனை சகாயம் பண்ணி அரங்கனை சிறிய அளவில் ஆராதிக்க அனுமதி பெற்று இருந்தனர் ..


இந்த காலத்தில் செஞ்சியில் நம்பெருமாள் இருப்பதை அறிந்த திருமனதூண்நம்பி .. உததமநம்பியை செஞ்சிக்கு அனுப்பி .. கண்ணனூரில் உள்ள சூல்தானின் படை பலம் மற்றும் பல்வேறு விசயங்களை எடுத்து சொல்லி .. கோபணார்யனை படை எடுத்து வரும் படி செய்தார் ..


தற்கால போஜிஸ்வரர் கோவிலில் ஒரு சிறு கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்த சூல்தானை வெல்ல விஜயநகர சாம்ராஜியத்தை நிறுவிய ஹரிரரின் மகனான விருப்பண்ண உடையாரின் தலைமையில்(பன்றிக்கொடி கொண்டு .. உலகை தாங்கிய வராக பெருமான் கொடி சின்னம் ஏந்தி ) ஒரு 70000 போர் வீரர்களுடன் கொபனார்யன் நம்பெருமாளையும் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு தற்கால மணச்சநல்லூர் மேற்கே உள்ள கோபுரப்பட்டி என்கிற ஊரில் நம்பெருமாளை நிலை படுத்தி மூன்று மாதங்கள் கடுமையான போர் நிகழ்த்தி ... எதிர்புறம் சுமார் 100000 பேர் கொண்ட (காக்கை சின்னக்கொடி ஏந்திய துலுக்கர் ) படையை வெல்ல உபயம் தினமும் அரங்கனை வேண்டி ... ஒரு தாசியை அனுப்பி அவள் மூலமாக அந்த சுல்தானை விஷம் வைத்து கொன்று ... அந்த படைகளை வென்று ...


அரங்கனை திருவரங்கத்தில் பெரியபெருமாளுடன் பிரதிஷ்டிப்பித்து ..

1341 ஆண்டு ஹோசாள மன்னனால் வெல்லமுடியாத அதே சுல்தான் படைகள் அரங்கன் “ரெங்கராஜனாக” தலைமைஏற்று வந்த போது தோல்வியுற்று .. தமிழகமெங்கும் அவர்கள் வேர் அறுக்கப்பட்டு ராமேஸ்வரம் வரை சென்று விருப்பண்ண உடையார் வெற்றிக்கொடியை நாட்டி தாம்பிரபரணி ஆற்றங்கரையில் தென் இந்தியாவில் எந்த ஒரு துலுக்கரும் இல்லை என்கிற செய்தியையும் ..பல கோவில்களை மறுபடி நிர்மாணம் பண்ணும் விதமாக ஒரு பெரிய விஜயஸ்தம்பம் கட்டு வைத்த செய்தியையும் அறிகிறோம் ..இவை அனைத்தும் சுமார் 1371-78 குள் நடைபெற்றன!!!


எங்கெல்லாம் சனாதன தர்மம் அழிகிறதோ அங்கெல்லாம் நான் வருவேன் என்று கீதையில் கண்ணன் சொன்ன வார்த்தையை உண்மையாக்கிய ஒரே தெய்வம் நமது அரங்கனே !! நாம் தென் இந்தியாவில் மட்டும் காணும் இவ்வளவு தேர்ச்சி பெற்ற கோவில்களும் ஆன்மீக ஸ்தலங்களும் அரங்கனின் கொடையே !!!


இன்னும் சில நூற்றாண்டுகள் கடந்து செல்வோம் ... காத்திருங்கள் !!!

Monday, 4 January 2016

அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 01

அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 01


அரங்கன் பற்றி நாம் அறிந்த சரித்திரம் மிக குறைவே .. சுமார் 1200 ஆண்டுகள் இருக்கலாம்!! அதற்கு முன் அவர் செய்த சரித்திர பணிகள் நாம் அறியமாட்டோம்!! ராமனுஜர் காலத்தே .. சமண பௌத்தம் போன்ற வேதப்புறம்பான மதங்களை வென்று எடுக்க உதவியதை முன்பே நான் எழுதி இருக்கிறேன்..

நாம் இப்போது காணப்போவது 14ஆம் நூற்றாண்டின் கோரமுகம் .... பாண்டிய மன்னர்கள் வாரிசு சண்டையிட்டுக்கொண்டு மதுரை அரசை மற்றும் தமிழகத்தை மிக மிக துண்டு துண்டான அரசர்கள் கொண்ட வலிமை யற்றதாக ஆக்கி வைத்து இருந்தனர் (மாறவர்மன் குலசெகரனுடைய மகன்கள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் சண்டை !!)
(
On the death of Kulasekara Pandyan I in 1308 CE, a conflict stemming from succession disputes arose amongst his sons. Jatavarman Sundara Pandyan III the legitimate & younger son and Jatavarman Veera Pandyan II, the illegitimate older son (who was favoured by the king) fought each other for the throne. Accounts of Muslim historians Wassaf and Amir Khusrow say he was killed by Sundara Pandyan in 1310 CE.[18] This led to a long protracted civil war.)


இவர்களின் வாரிசு சண்டை Amir Khusrau என்கிற முஸ்லிம் இலக்கியவாதி தனது நாட்குறிப்பில் எழுதும் அளவிற்கு வடநாட்டிலும் தெரிந்து இருந்து .. அங்கிருந்து மாலிக் காபூர் என்கிற கொடுங்கோலன் தமிழகத்தை சூறையாட வந்து அனைத்து செல்வங்களையும் ... இறைமூர்த்தங்களையும் நிர்மூலமாக்க உதவியது ..இவன் கொள்ளை அடிக்க வந்தவன் மட்டுமே!! இவனால் ஸ்ரீரங்கத்தில் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரவர் என்று கோவிலொழுகு கூறுகிறது... 



பின்னர் 1323 உல்லுக்கான் என்று அழைக்கப்பட்ட முகமது பின் துக்ளக் படையெடுத்து வந்து ...மதுரையில் ஒரு ஆட்சியை நிறுவினான் ..

(https://en.wikipedia.org/wiki/Madurai_Sultanate) அதுவரை நமது அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டாலும் கோவில்கள் நகரங்களை அழிக்க மாட்டார்கள் .. பாமர்களை கொல்ல மாட்டார்கள் .. பெண்களை மானபங்க படுத்த மாட்டார்கள் .. இவை அனைத்தும் நடந்தன !!!


ஹிந்துக்களின் மீது கட்டவிழ்க்கப்பட்ட கொடூரங்களை நேரில் கண்டு எழுதிய இபுன் பட்டுடாவின் (
http://ibnbattuta.berkeley.edu/) பார்வையில் ஹிந்து கணவன் மனைவி மற்றும் சிறு குழந்தைகளை கூட கொடூரமான முறையில் கொன்றதை காண சகிக்க முடியவில்லை என்று ஹிந்துக்களின் மீது பரிதாப்பட்டு எழுதியுள்ளார் !!



இவை அனைத்தும் நடந்து கொண்டு இருந்தபோது .. ஹோய்சாள  மன்னனா வீரவல்லாளன் (1341) சுமார் ஒரு லக்ஷம் படை வீரர்களுடன் மதுரை சுல்தானின் வெறும் 6000 படை வீர்களுடன் தோற்ற கதை கேட்டால் நாமெல்லாம் நம்ப மாட்டோம் ... ஆம் .. முஸ்லிம் படைகளிடம் சமாதம் பேசி .. அவர்களால் வஞ்சிக்கப்பட்டு கொல்லபட்டு .. . அவனது பிணம் வைக்கோல் திணிக்கப்பட்டு ... இன்று கோரிப்பாளையம் என்று (அதனால்தான்) அழைக்கப்படுகிற இடத்தில் தொங்கவிடப்பட்டு ... கேவலப்படுத்தப்பட்டது .. 



In c.1342-3, a decisive war that would end the Hoysala fortunes was fought at Kannanur. Veera Ballala III fought a pitched battle against Ghiyas-ud-din, the Sultan of Madurai. Just when a Hoysala victory seemed imminent, The Hoysala monarch was captured, and according to historians Chopra et. al, was "strangled and flayed". His son, Veera Ballala IV met the same fate in c.1346, bringing to an end the glorious rule of the Hoysalas.


பின்னர் சுமார் பல ஆண்டுகள் தமிழகத்தில் எவருமே இந்த துலுக்கர் கொடூரத்தை தட்டிகேட்க வரவில்லை!!



இவை எல்லாம் ஒரு புறம் இருக்க .. 1323 ஆண்டு துக்ளக் படையெடுப்பில் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறிய நம்பெருமாள் ..பல நாடுகள் சுற்றி கடைசியில் திருமலையில் வாசம் செய்தது வந்த காலத்தே.. விஜயநகர் சாம்ராஜ்யத்தின் அரசர் வீரகம்பண்ண உடையாரின் படைத்தலைவர்களில் ஒருவரான கோபணார்யன்... செஞ்சி பகுதி இவரின் ஆதிகத்தின் கீழே இருந்தது .. இவர் திருமலையில் சென்று அரங்கனை தரிசிக்கிறார்...




இவர் அரங்கனின் மிது மிகவும் பரிவு கொண்டு (அரங்கனுக்கு தெரியும் எவரை தெர்ந்தெடுத்து காரியங்களை செய்விக்க வேண்டும் என்று !!) தனது ஊரான செஞ்சிக்கு எடுத்து சென்று ஆராதித்து வந்தார்..



ஒருலக்ஷம் படையுடன் சென்று வைக்கோல் அடைத்த பிணமான வீரவல்லான் இருக்க .. அரங்கன் எப்படி துலுக்கனை வெல்ல சரித்திரத்தில் இடம் பிடித்தான் என்பதை நாளை பார்ப்போம் ....