Friday, 29 May 2015

அரங்கமாநகர் மீது துலுக்கர் படையெடுப்பும் அரங்கன் உலாவும்


அரங்கமாநகர் மீது துலுக்கர் படையெடுப்பும் அரங்கன் உலாவும்

வரும் ஞாயிறு அன்று (31.05.2015) நம்பெருமாள் ஸ்ரீரங்கவிட்டு வெளியேறி பல காடு மலைகள், திவ்ய தேசங்கள் மலைகுகைகளில் தங்க வைக்கப்பட்டு திரும்பவும் 1371 ஆண்டு திருவரங்க திரும்பிய நன்னாளை அனைவரும் கொண்டாடும் விதமாக பத்தர்கள் அனைவரும் கூடி அன்று காலை ஒரு ஊர்வலமும், மாலையில் எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் சுவாமிகள் இதை பற்றி ஒரு சிறப்புரை ,ரங்கா விலாச மண்டபத்தில் ஆற்ற இருக்கிறார் .. அனைவரும் அதில் கலந்துகொண்டு சிறப்பிக்க பிறார்த்திக்கிறேன்..

தென் இந்தியாவின் மீது முதல் முதலில் படையெடுத்து வந்தவன் மாலிக் காபூர் (1311-13) இரண்டாம் முறை படையெடுத்து வந்தவன் உலுக்கன் எனப்பெயர் கொண்ட முகமது பின் துக்ளக் .

இந்த இரண்டாம் முறை படை எடுத்துவந்த போது பலருடைய தலை கொய்யப்பட்ட கோடுர சம்பவம் நடைபெற்றத்தாக கோவில் ஒழுகு கூறுகிறது “ பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வன் மேட்டுக்கலகம் “ என்று நம்பெருமாள் பங்குனி உத்சவம் எட்டாம் திருநாள் அன்று வட்திருக்காவேரி (கொள்ளிக்கரை இன்றைய பஞ்ச கரை ரயில்வே கேட் அருகில் ) கரையில் அன்று இருந்த பன்றியாழ்வான் கோவிலில் பெருமாள் எழுந்தருளி இருந்த போது .. உலுக்கன் வருகை அறிந்து மக்கள் தொடர்ந்து வருவரே என்று அஞ்சி எவரும் அறியாமல் திரை இட்டு பெருமாள் மற்றும் உபய நாச்சியார்களை மறைவாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்றார்கள் ..
இந்த இடம் இப்போது இருக்கும் நிலை பற்றி ஒரு காணொளி
https://youtu.be/r3MOwlA8QcQ

1336 ஆம் ஆண்டு விஜயநகர் சாம்ராஜ்யம் இறைஅருளால் இந்தியாவில் ஏற்பட்டது.. நம்பெருமாள் திருமலையில் இருந்தபோது செஞ்சியை ஆண்டுகொண்டு இருந்த கோபண்ண உடையார் திருமலையில் வருகை தந்து அரங்கநாதனை திரிசித்து விட்டு  ஸ்ரீரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ண சித்தம் கொண்டார் ..

நம்பெருமாளை சிங்கபுரம் என்கிற சேத்திரத்தில் எழுந்தளுப்பண்ணி  பல காலம் ஆராதித்து வரும் காலத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து சிங்கபிரானுடைய (முந்தைய ஸ்ரீரங்கமும் மத்வர்களும் பதிவில் சொன்ன துலுக்கர்களிடம் பழகி அவர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் பூஜை செய்ய அனுமதி வாங்கியவர் ) குமாரர் திருமணத்தூண் (திருமணல்தூண் நம்பி என்றும சில குறிப்புகள் சொல்லுகின்றன ) அன்றைய கோவில் அதிகாரி உத்தம நம்பியை செஞ்சிக்கு அனுப்பி கோபண்ண உடையாருக்கு கண்ணனூரில் உள்ள துலுக்கன் படை பற்றிய செய்திகளை சொல்லி அவனை வென்று ...

1371 CE பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் அழகியமனவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான்  இதற்கான கல்வெட்டும் ஒன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் காணப்படுகிறது .






இந்த கலபக்காலத்தில் (1311-1371) இருமுறை படையெடுப்பு நடைபெற்றதை பார்த்தோம் .. 

அதில் முதல் முறை படை எடுப்பின் போது நம்பெருமாளை டெல்லி சுல்தான் எடுத்து சென்று விட அதை ஸ்ரீரங்கம் கோவில் ஸ்தலத்தார் திரும்ப மீட்டு கொண்டு வந்த விசயமும் அறிய முடிகிறது .. (இதை பற்றிய தெளிவான விளக்கங்கள் கோவில் ஒழுகிலே மற்ற பதிவுகளிலோ  எதுவும் இல்லை என்பதால் அதை முதல் படையெடுப்புக்கும் இரண்டாம் படையெடுப்புக்கும் இடப்பட்ட காலத்தில் (1311-1322) அனுமானிப்பதே சரி என்று   ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கருதுகிறார் )

பின்னர் அரங்கனதரை பிள்ளைலோகசாரியார் உபய நாச்சிமாருடன் மறைவாக எடுத்து சென்றதும் தெரிகிறது ..(1322)

இந்த இருமுறை அரங்கன் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறிய (1311 க்கு பிறகோ அல்லது 1323 க்கு பிறகு தெரியவில்லை ) காலத்தே ஒரு அரங்க பெருமானை புதிதாக செய்து நம் பெரியோர்கள் வழிபட்டு வந்துள்ளார்கள்.

உங்களில் பலருக்கு தெரியாத விசயம் அரங்கன் மூலஸ்தானத்தில் வலது புறத்தில் ஒரு பெருமாள் இருப்பார். நம்பெருமாள் உயரமே உள்ள அவரின் பெயர் திருவரங்கமாளிகையார் . அவரே அந்த கலாபக்காலத்தில் செய்து வைக்கப்பட்ட பெருமாள்..

இதே காலத்தே தாசி ஒருத்தி அரங்கத்தினுள் தங்கி இருந்து துலுக்க படைத்தளபதியை தந்திரமாக அன்றைய உயரமான கோபுரமான கிழ வாசல் கோபுரத்தின் மீது ஏற்றி அதில் இருந்து அவனை கீழே தள்ளி கொன்று தானும் உயிரை மாய்த்துக்கொண்டாள் ..

அவளின் பெயர் காரணமாக (வெள்ளையம்மாள்) அந்த கோபுரத்தை வெள்ளையம்மாள் கோபுரம் என்றும் (வெள்ளை கோபுரம்)  அழைக்கப்பட்டு வருகிறது ..

வெள்ளையம்மாள் இறக்கும் வேளையில் கோவில் அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து சென்றதை, தேவ தாசி ஒழிப்பு சட்டம் (1953) வரும் காலம் வரை செயல் படுத்தி வந்தனர் ..

அவை,.. ஸ்ரீரங்கம் கோவிலில் விளக்கு மற்றும் ஆடல் பாடல் தூய்மை பணி செய்து வந்த தேவ தாசிகளுக்கு .. அவர்கள் இறந்தால் கோவில் மடப்பள்ளியில் இருந்து அரங்கனுக்கு அமுது செய்யும் அடுப்பில் இருந்து நெருப்பும், திருக்கொட்டார

த்தில் இருந்து வாய்க்கு அரிசியும், (அமுது படி), அரங்கன் போட்டுக் கலைந்த மாலை, மற்றும் அரங்கன் கோவில் தீர்த்தம் இவை அனைத்தும் கிடைத்து வர வேண்டிக் கொண்டு இறந்தாள்..

திருவரங்கதில் நம் முனோர்கள்  பெரும் பாடு பட்டு அரங்கனை மீட்டு திருவரங்கம் திரும்பிய நாளை 31.05.2015 அன்று கொண்டாடுகிறோம் ..
அரங்கனுக்காக  பலா ஆயிரம் பேர் உயிர் துறந்து நாளை நினைவில் கொள்ள வரும் ஞாயிறு அன்று காலை ஸ்ரீரங்கத்தில் கூடுவோம் ..












No comments:

Post a Comment