Wednesday, 29 April 2015

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 2

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 2
காவிரியின் மாற்றம் பற்றிய கல்வெட்டுப்படிவங்கள் படங்கள் முந்தைய பதிவுகளில் பார்த்தீர்கள் .. அவை மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சி காலத்தில் 1198 CE இல் பொறிக்கப்பட்டது ..


.இந்த கல்வெட்டுக்களை முழுமையாக படித்தோமேயானால் வெள்ளைக்காரன் வந்துதான் நில அளவை பற்றிய அறிவு நமக்கு (தமிழர்க்கு ) கிடைத்தது என்கிற ஒரு தவறான எண்ணம் தகர்க்கப்பட்டது!!


அன்று காவேரியில் இன்று காணும் மணல் கொள்ளை இல்லாதபடியால் .. வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டு பல விளைநிலங்கள் மண் மேடு இட்டு பயனில்லாமல் போய்விட்டது..


முதலில் "அண்ணவாயில் உடையான் காங்கேயராயர் " என்பவர் இதற்க்கெல்லாம் நிர்ணயம் செய்யும் ஒரு பொது அதிகாரியாக நேமிக்கப்பட்டார் ..


திருவரங்கம் கோவில் நிலங்களும், திருவானைக்கா கோவில் நிலங்களும் தனி தனியே அளந்து சுதர்சன சக்கரம் பொதித்த சின்னம் ஸ்ரீரங்கம் நிலத்திற்கும் , திரிசூலம் பொறித்த சின்னம் திருவானைக்கா கோவில் நிலங்களுக்கும் இடப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டன ..


இவ்வாறு செய்யும் காலத்து .. சிந்தாமணி கிராமத்து (தற்கால அண்ணாசிலை பகுதி ) மக்கள் தங்களது எதிர்ப்பை கிராமத்து எல்லையில் படுத்து தெரிவித்த விசயமும் சொல்லப்பட்டு உள்ளது ..(1198 ஆம் ஆண்டு நமது ஊர் எப்படி இருந்தது .. நமக்கு நாகரீகம் சொல்லிக்குடுத்தாக சொல்லப்படும்  வெள்ளைக்காரன் ஊர் எப்படி இருந்தது என்று உங்கள் முடிவுக்கே விடுகிறேன் )

இவ்வாறு தனியார் நிலங்கள் எடுக்கப்பட்டதற்கு மாற்றாக கொடதிட்டை (தற்கால கொத்தட்டை ) என்கிற கிராமம் அவர்களுக்கு மாற்றாக வழங்கப்பட்டது ..

காவேரி ஆறு ஸ்ரீரங்கத்திற்கு மேற்கே மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள புந்நாக தீர்த்தம் (நம்பெருமாள் ஜீயபுரம் செல்லும் போது இங்கு தீர்த்தவாரி கண்டருலுவார். எனது ஜீயபுரம் புகைப்பட, காணொளி காட்சிகளிலும் இதை காணலாம்) அருகில் இருந்து தென் புறமாக திருப்பி தற்போதைய இடம் வழியாக திருப்பப்பட்டது ..

திருவாழி பொருத்திய கற்கள் பற்றிய செய்திக்காக ஒரு படம் போட நினைத்தேன் .. அதற்காக அதே காலத்தை ஒத்த ஒரு படம் .


. இது தெற்கு உத்திர வீதியில் உள்ள மணவாள மாமுனிகள் சந்நிதி வாசலில் உள்ள பாண்டியன் காலத்து சின்னம் .வருடம் 1251 CE .

.இது அந்த அரசனின் தளபதி தஞ்சலூர் உடையான் வர்ந்தருவான் பல்லவராயன் திரிதண்டி சன்யாசிகளுக்கு கட்டியது ..(மணவாள மாமுனி இந்த கல்வெட்டு (மற்றும் மண்டபம் )வைத்த போது பிறந்திருக்கவில்லை!!!

பொன் வேய்ந்த பாண்டியன் காலத்து கல்வெட்டு 1251

இந்த மடம் கட்டப்பட்டபோது மணவாள மாமுனிகள் பிறக்கவே இல்லை !!! (அந்த சக்கர சின்னத்தை பல முறை அவர் தொட்டு இருக்ககூடும் !!) 
விஜயராகவன் கிருஷ்ணன்

No comments:

Post a Comment