Wednesday 29 April 2015

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 3

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 3


ஸ்ரீரங்கம் கோவில் காவேரி ஆற்றின் சீற்றத்தாலே பலமுறை மண் மேடு  இட்டும் வெள்ள நீரினால் அவதியுற்றும் வந்ததை கண்டு அதை மாற்ற திருவரங்கத்தை அப்போது நிர்வகித்து வந்த "கூரநாராயண ஜீயர் " கந்தாடை தோழப்பருடன் இணைந்து இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டார் ..என்பதை பார்த்தோம் ..

நாம் முன்பே பார்த்தது போல் சிந்தாமணி பகுதி மக்கள் இந்த மாறுதல் அரங்கனையும் அவன் திருவரங்கத்தையும் காக்கவே என்று சொல்லியும் தங்கள் நிலங்களை அளிக்க மறுத்தே வந்தனர் .. அவர்களை கூரநாராயண ஜீயர் தனது மந்திர சக்தியால் சமாதானப்படுத்தி கைகொண்டார்.

கோவில் திருவோழுகு இந்த விசயத்தில் நிறைய தோப்புகளை நீக்கி திருவரங்கத்தின் தென் புரத்தின் வழியாக காவேரி வெட்டப்பட்டதை கூறுகிறது ..

இன்றும் காவேரி ஆறு மேலூருக்கு அருகில் இப்படி திரும்பி இருப்பதை காணலாம் ... இந்த மாற்றம் நடந்த பிறகு முன்பு தென் புறம் (அதாவது இன்று காவேரி ஓடும் இடத்தில் இருந்த ) அய்யானர் கோவில் மற்றும் பிடரி கோவில்களை வட புறம் நகர்த்தி கட்டப்பட்டது ..

தற்கால மேலூர் ஐய்யனார் கோவிலில் உள்ள ஒரு தவக்கோல ஜைன மத துறவியின் சிலை .. அன்று ஸ்ரீரங்கத்தில் ஜைன அகரங்கள் இருந்தமைக்கு ஒரு சான்று .. (அதை அவர்கள் மணவாள மாமுனிகள் என்று எழுதி இருக்கிறார்கள் )

காவேரியில் இருந்து ஒரு அணியரங்கன் வாய்த்தலை (regulator ..இன்று அணைக்கரை என்கிற இடம் ) கட்டுவித்து , ஒரு வாய்க்காலை வெட்டி வைத்து ... அந்த வாய்க்கால் முன்பு காவேரி சென்ற அதே பாதையில் செல்லும்படியாக செய்து !!( இன்று இருக்கும் அந்த வாய்க்கால்தான் அந்நாளைய காவேரியின் தென் கரை )  இதற்காக கரை காப்பானாக தனது சீடன் "காருணாகர தாசன் " என்போனை அவர்  நியமித்தார் ..

இந்த ஆறு (இன்று அம்மாமண்டபம் சாலையில் ராஜகோபுரம் முன் உள்ள பாலம் இதன் மீதுதான் செல்கிறது ) மலட்டு ஆறு என்றே உள்ளூர் வாசிகளால் அறியப்பட்டு வந்துள்ளது ..

இந்த சிறிய வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் வட புறம் நாணல் நடப்பட்டு (அந்த வாய்க்காலில் இருந்து ராஜகோபுரம் வரை ) நிலம் மலடு ஆக்கப்பட்டதை .. கோவில் ஒழுகு மற்றும் கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றான் ..

ஒரு பெரிய ஆறு ஓடிய பாதையில் பல நூறு அடி ஆழம் வரை வெறும் மணல் மட்டுமே இருக்கும் .. அதில் எந்த ஒரு செடியும் வளராது .. அவற்றை மாற்ற நாணல் செடிகளை வளர்த்து இன்று நீங்கள் காணும் பசுமையான பகுதியாக அவற்றை மாற்றிய அந்த விஞ்ஞான முன்னோர்களை என்ன சொல்வது???

...

கூரனாரயனர் என்கிற அந்த மகான் நமது ஸ்ரீரங்கத்தை ஒரு எந்திரம் போல அமைத்து பல நெடும் காலம் நாம் அரங்கன் நகர் வாழ பல கோவில்களையும் மந்திரப்பூர்வமாக அமைத்தார்

காவேரி சென்ற பாதையில் கூரனாராயனர் கட்டிய கோவில்களை வரும் நாட்களில்  பார்ப்போம்..




2 comments:

  1. Great article,thanks a lot for sharing this useful post with us, keep it up
    thanku
    latha

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete